megamalai: மேகமலை போய்ட்டு வாங்க ..! இத படிச்சிட்டு..!

1 min read
megamalai-vidiyarseithigal.com

megamalai

தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்கள் என்றாலே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்கள் தான் முதலில் ஞாபகத்துக்கு வருகிறது. ஆனால் இவற்றை கடந்து பல இடங்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு தான் உள்ளன. அவற்றில் ஒன்று தான் மேகமலை.

மேகமலை:

பெயருக்கு ஏற்றால் போல மேகங்கள் சூழ்ந்து காணப்படும் ஒரு ரம்மியமான மலைப்பகுதி ஆகும். இந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அரிய வகை உயிரினங்கள் இப்பகுதியில் சுற்றிதிரிகின்றன. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சிறந்த இடமாக மேகமலை திகழ்கிறது. அதிக குளிறும் இல்லாமல், அதிக வெயிலும் தெரியாமல் ஒரு இதமான சூழ்நிலையை இம்மலைத்தொடர் அளிக்கிறது.

இந்த மலைத்தொடரை முதலில் ஆங்கிலேயர்கள் தான் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் 1920ம் ஆண்டு காலங்களில் இப்பகுதியில் தேயிலை தொழில் செய்ய தொடங்கி உள்ளனர். காலப்போக்கில் மெல்ல தேயிலை தொழில் பரவி தற்போது 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தேயிலை தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள் (megamalai) :

மேகமலையில் சுற்றிபார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் மேலனை, கீழனை, தூவானம் அணை, மணலாறு அணை, வெள்ளியாறு அணை, இரவங்கலாறு அணை என மேகமலை பகுதியை சுற்றி மொத்தம் 5 அணைகள் உள்ளன. மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ள இடம் என்பதால் இத்தனை அணைகள் இங்கு கட்டப்பட்டுள்ளன.

அங்குள்ள அணைகளில் பிடிக்கபடும் மீன்களை அப்பகுதியிலேயே வறுத்து அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொடுப்பர். மேலும் அங்குள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைகளை அணுகினால் எப்படி தேயிலையில் இருந்து டீத்தூள் தயாரிக்கிறார்கள் என்பதனை விளக்கி காண்பிப்பர். மேல்ணையை கடந்து சென்றால் அழகான அருவி ஒன்றினை காணலாம்.

கடுமையான வெயில் காலத்தில் கூட இந்த அருவியில் தண்ணீர் இருந்து கொண்டே தான் இருக்குமாம். மேலும் இந்த தண்ணீர் முலிகை மற்றும் மருத்துவ குணம் நிரைந்தது என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

இத மறந்துடாதிங்க:

மேகலைக்கு பேருந்து மூலமாகவும் செல்லலாம் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரிலிருந்து காலை , மாலை என இரு வேளையிலும் பேருந்து வசதி உள்ளது. ஒரு வேலை நீங்கள் சொந்த வாகனங்களில் செல்பவராக இருந்தால் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள வனதுறை சோதனை சாவடியில் அனுமதி பெற்றுக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

முற்றிலும் வன பகுதி என்பதால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மேலே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் மலைக்கு மேலே செல்ல அனுமதி இல்லை. அதனால் மேகமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முடிந்த அளவு அனுமதிக்கபடும் நேரத்திற்குள் செல்வது சிறந்தது ஆகும்.

ஏன் மேகமலை ?

தமிழகத்தில் மேகமலை போன்று பல சுற்றுலா தலங்கள் உள்ளன. பெரும்பாலன இடங்கள் பற்றி இதுவரை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். எப்போதும் ஊட்டி, கொடைக்கானல் மட்டுமே சுற்றுலா செல்லும் நபர்கள் நீங்கள் என்றால், இந்த முறை வித்தியாசமாக முற்றிலும் மாறுபட்ட ஒரு இடத்திற்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக நீங்கள் செல்ல வேண்டிய இடம் மேகமலை ஆகும்.

இயற்கை கொஞ்சும் மலையில் நம்மை உரசி செல்லும் மேக கூட்டங்கள் என காண்பதற்கு அரிய காட்சிகள் நிறைந்த ஒரு மலைபகுதியாக மேகமலை உள்ளது. நண்பர்களுடம் லாங்க் ரைட் செல்ல விரும்பும் பைக் பிரியர்களுக்கு சிறந்த இடமாக இந்த மேகமலை உள்ளது.

Spread the love
x