lic policy details in tamil:சிறந்த எல்.ஐ.சி பாலிசி திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
1 min readlic policy details in tamil
நாம் உழைக்கும் வரை நாமோ நமது குடும்ப உறுப்பினர்கலோ பிறரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நமக்கு வேலை பறிப்போனாலோ அல்லது எதேனும் துயர சம்பவம் நிகழ்ந்தாலோ நமக்கும் , நமது குடும்பத்திற்கு பாதுகாப்பாக சில சேமிப்பு இருக்க வேண்டும். வங்கியில் சேமிக்கலாம் ஆனால் குறிப்பிட்ட அளவு தான் நமக்கு கூடுதல் பலன் தரும்.
இதுவே பிற நிதி சேமிப்பு திட்டங்களில் சேமித்தால் நிச்சயம் நல்ல லாபம் தரும். பிற நிதி சேமிப்பு திட்டம் பல உள்ளன ஆனால் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பி சேமிக்கும் இடமாக LIC (lic policy details in tamil) உள்ளது. அதிகபடியான மக்கள் இந்த நிறுவனத்தில் சேமித்து வருகின்றனர். ஒரு நிலையான மெச்சுரிட்டி தொகையினை குறிப்பிட்ட கால அளவில் எல்.ஐ.சி நிறுவனம் வழங்கி வருகிறது.
நாம் ஓய்வு பெறும் போது அல்லது பிள்ளைகளின் படிப்பு , கல்யாணம் போன்ற செலவுகளுக்கு சேமிக்க விரும்பும் நபர்கள் இதில் அதில் சேமித்து வருகின்றனர். பெரும்பாலும் நபர்களுக்கு எந்த திட்டத்தில் சேமிக்கலாம் (lic policy details in tamil) அதில் என்ன நமக்கு வருவாய் கிடைக்கும் என பல சந்தேகம் இருக்கலாம். அவர்களின் சந்தேகத்தை தீர்க்க சிறந்த திட்டங்களை தேர்வு செய்து இதில் பட்டியலிட்டுள்ளோம்.
lic policy list:
ஜீவன் அமர் திட்டம்: lic jeevan amar
இந்த திட்டமானது 18 முதல் 65 வயது நபர்களுக்கானது. இந்த திட்டம் மெச்சூரிட்டி ஆகும் காலம் அதிகபட்சம் 80 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசியில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் மரணம் ஆயுள் காலம் வரை பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் இதில் புகைப்பிடிபவர்களுக்கும் கவர் செய்யபடுகிறது. புகைப்பிடிப்பவர்களின் பிரீமியம் அளவு அதிகமாகும். இதில் ஆண்களை விட பெண்களுக்கு பிரீமியம் சற்று குறைவாகும் . அதிக தொகை முதலீடு செய்பவர்களுக்கு சிறந்த தள்ளுபடி இந்த திட்டம் வழங்குகிறது.
எல்.ஐ.சி ஜீவன் லாப் திட்டம்: jeevan labh policy
இந்த திட்டத்தில் முதிர்ச்சியில் பெரிய தொகை கிடைக்க கூடிய திட்டமாகும். ஒருவேலை பாலிசி முடிவதற்குள் வாடிக்கையாளர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு அந்த நிதியானது கிடைக்க கூடிய திட்டம் இது. இந்த திட்டத்தில் பாலிசி தாரர் எல்.ஐ.சியின் லாபத்திலும் பங்கு கொள்கிறார். மேலும் பாலிசியின் முடிவில் கூடுதல் போனஸ் கிடைக்கிறது.
post office savings scheme in tamil:வங்கிகையை காட்டிலும் அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு..!சூப்பரான திட்டங்கள்..!
ஜீவன் உமங் திட்டம்: lic jeevan umang
எல்.ஐ.சி திட்டங்களில் மிகவும் சக்தி வாய்ந்த திட்டமாக இது உள்ளது. இதில் வாடிக்கையாளருக்கு 100 வயது பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பாலிசி காலம் முடிந்தாலொ அல்லது பாலிசி தாரருக்கு மரணம் ஏற்பட்டாலோ பாலிசி தொகை குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கபடுகிறது. கூடுதலாக பணி ஒய்வுக்கு பின் இந்த திட்டம் ஒரு ஒய்வூதிய திட்டமாகவும் செயல்படுகிறது.
நியூ ஜீவன் ஆனந்த திட்டம்: lic jeevan anand
இந்த பாலிசியானது 18 வயது மேற்பட்டவர்களுக்கு உகந்த திட்டமாகும். இதில் பாலிசி எடுப்பவர்களுக்கு அதிகபட்ட வயது 50 ஆண்டுகள் ஆகும். குறைந்தபட்சம் ஒரு லட்சம் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். பாலிசி இறந்துவிட்டால் நாமினிக்கும் உத்தரவாத மிக்க மற்றும் ஒருகிணைந்த போனஸ் கிடைக்கும் இதில் . ஒரு வேலை பாலிசி தாரர் உயிருடன் இருந்தால் அவருக்கு டெபாசிட் போனசூடன் அசல் தொகையும் கிடைக்கும்.
இதுபோன்ற மேலும் சில பாலிசிகள் சிறந்த பாலிசிகள் உள்ளன. அவற்ரை குறித்து தொடரும் பதிவுகளில் பார்க்கலாம்.