lic policies: பெண்களுக்கான சூப்பரான சேமிப்பு திட்டம்..! ரூ.29 செலுத்தினால் ரூ.3.97 லட்சம் பெறலாம்..!
1 min readlic policies
இந்தியாவில் உள்ள சேமிப்பு நிறுவனங்களில் எப்போதுமே எல்.ஐ.சி நிறுவனம் சிறந்த நிறுவனமாக உள்ளது.எல்.ஐ.சி திட்டங்களால் பலர் பயனடைந்துள்ளனர். பல்வேறு திட்டங்கள் உள்ள எல்.ஐ.சியில் பெண்களிடம் அதிகம் பிரபலம்டைந்த திட்டம் ஆதார் ஷீலா திட்டம்.
இந்த திட்டத்தில் 8 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். சிறிய அளவிலான தொகையை நீண்ட காலமாக முதலீடு செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். பெண்களுக்காக உருவாக்கபட்ட இந்த திட்டம் பெண்களுக்கு சிறந்த லாபத்தை கொடுக்கும்.
இந்த திட்டத்தில் நாள்தோறும் ரூ.29 செலுத்தினால் போதும் இத்திட்டம் நிறைவு பெறும் போது முதிர்வு தொகையாக ரூ.3.97 லட்சம் சம்பாரிக்கலாம். இதுபோன்ற திட்டம் வாழ்நாள் முதலீடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு நிச்சயம் கைக்கொடுக்கும் சிறந்த திட்டமாக இருக்கும்.
lic policies
ஆதார் அட்டைகள் வைத்திருக்கும் பெண்களால் மட்டுமே இந்த பாலிசியை பெற முடியும். இந்த திட்டம் பாலிசிதாரருக்கு மட்டுமின்றி, அவர் இறந்த பிறகு அவருடைய குடும்பத்தினருக்கும் சிறந்த பாதுகாப்பினை வழங்குகிறது.இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.75,000 முதல் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம் .
நல்லெண்னையில் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுகோங்க..!
திட்டத்துகான முதிர்வு காலம் 10 முதல் 20 ஆண்டுகள். ஒருவர் ப்ரீமியத்தை மாதம் ஒருமுறை அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தலாம். 30 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் தினமும் ரூம். 29 முதலீடு செய்ய தொடங்கினால் 20 ஆண்டுகளில் நீங்கள் ரூ. 2,14,696-ஐ முதலீடு செய்வீர்கள் அப்படியென்றால் மெச்சூரிட்டியின் போது ரூ. 3,97,000 உங்கள் கையில் இருக்கும்.
பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் சேர்ந்து முழு பயனை அடையலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் இதுப்போன்ற சேமிப்பு கட்டாயம் உதவும். கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி ஆன்லைன் தளத்தில் பார்க்கலாம்.