lg wing price: 80 ஆயிரம் இல்லங்க..! 29 ஆயிரத்திற்கு தரோம்..! Lightning price deal வெளியிட்ட LG ..!

1 min read
lg wing price-vidiyarseithigal.com

lg wing price

lg smartphone கள் வரிசையில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. செல்போன்களில் புதுமையை புகுத்தி வரும் LG நிறுவனம் சமீபத்தில் LG Wing என்ற செல்போனை வெளியிட்டது. அந்த ஸ்மார்ட்போன் வெளியானதும் பலரை ஆச்சரியப்படுத்தியது அதற்கு காரணம் அதனுடைய டிசைன் மற்றும் ஸ்டைல் தான்.

LG WING:

புத்தம் புதிய டிசைனில் வெளியான WING பல தரப்பு வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இந்த ஸ்மார்ட்போனில் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது . அதன் Rotating டிஸ்பிளே தான். பலர் அந்த டிஸ்பிளே காரணமாக இந்த செல்போனை வாங்க விரும்பினர். ஆனால் தொடக்கத்தில் இதன் விலை 80 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்ததால் பலரும் வாங்க தவிர்த்தனர்.

lg wing price-vidiyarseithigal.com

இந்நிலையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பதை நிறுத்திக் கொள்வதை LG நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக மீதமுள்ள செல்போன்களை Lightning deals என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

LG WING specifications:

இரண்டு விதமான கலர்களில் இந்த செல்போன் சந்தையில் விற்பனை செய்யபட்டு வருகிறது. Illusion sky and dark black என்ற இரண்டு வித கலர் மாடல்கள் இந்த செல்போனில் வருகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 765g வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே 6.8 இன்ச் கொண்ட OLED டிஸ்பிளே ஆக உள்ளது.

கேமரா Rear camera -64 MP wide , 13MP ultrawide, 12MP ultrawide, 4K video recording என பல சிறப்பம்சங்கள் கொண்டதாக உள்ளது. Front camera- 32 MP pop up கேமரா கொடுக்கபட்டுள்ளது. இதன் ரேம் 8GB ஆகவும், Internal storage திறன் 128GB ஆகவும் உள்ளது.

மேலும் 5G சப்போர்ட் கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது. இரண்டு சிம் கார்ட்டுகள் போடும் வசதி கொண்டதாக உள்ளது. பேட்டரி திறன் 4000 Mah ஆக உள்ளது.

LG wing price :

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வெளியான போது இதன் விலை ரூ.80 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. கவர கூடிய வகையில் டிசைன் என அனைத்தும் இருந்தாலும் பலர் இதன் விலை காரணமாக வாங்குவதற்கு சிந்தித்தனர்.

lg wing price-vidiyarseithigal.com

ஆனால் தற்போது இதன் விலையானது வெகுவாக குறைக்கபட்டு  ரூ29.999 விற்பனை செய்யபடுகிறது. இந்த விலை குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே என தெரிவிக்கபட்டுள்ளது.

வாங்கலாமா ? வேண்டாமா?

குறைவான விலை நிறைவான தரம் இருப்பினும் வாங்கலாமா என்ற சந்தேகம் எழுப்ப தான் செய்யும் காரணம் LG அதன் மொபைல் Production unit மூடியது தான். பலருக்கு வருகிற சந்தேகம் தான் ஒரு வேளை வாங்கிய சில மாதங்களில் கோளாறு ஏற்பட்டால் என்ன செய்வது ?

அதற்கு LG ஒரு தீர்வு கொண்டு வந்துள்ளது அவர்கள் குறிப்பிடுவது எல் ஜி ஸ்மார்ட்போனை வாங்கி ஒரு வருடத்திற்கு வாரண்டியும், மேலும் 5 ஆண்டுகளுக்கு சர்வீஸ் வாரண்டியும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அறிவிப்பு வெளியிட்டாலும் பலர் வாங்குவதற்கு தயக்கம் காட்டி தான் வருகின்றனர்.

Spread the love
x