கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு வருமா? எடியூரப்பா விளக்கம்..!
1 min readஇந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றை கட்டுபடுத்தும் வகையில் பல இடங்களில் குறைந்தபட்ச ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து 300,400 என்ற நிலைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கூறுகையில், பெங்களூரு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை பார்த்தால் கொரோனாவின் இரண்டாவது அலை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தமாட்டோம். ஆனால் பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் ஊரடங்கு வேண்டாம் என்று நினைத்தால் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.