குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்- ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி..!

1 min read
makkalneethimaiyam-vidiyarseithigal

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கபட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர கூட்டணி மற்றும் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டனி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் முழுவீச்சில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் பொதுகூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது . அதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லதரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 திமுக ஆட்சி அமைந்தவுடன் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதன் முதலில் அறிவித்த கட்சி மக்கள் நீதி மய்யம் தான் என தெரிவித்துள்ளார். மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற திட்டங்களை தாங்கள் முன் கூட்டியே அறிவித்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
x