is black coffee good for weight loss tamil

1 min read
is black coffee good for weight loss tamil-vidiyarseithigal.com

is black coffee good for weight loss tamil

உலகில் அதிகமான மக்களால் குடிக்கப்படும் ஒரு பானம் காபி ஆகும். இந்தியாவில் பெரும்பாலனோர் பால் சேர்த்துதான் காபி குடிக்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் பெரும்பாலும் பிளாக் காபிதான் அனைவராலும் குடிக்கப்படுகிறது.

மேற்கத்திய கலாச்சாரத்தில் புகழ் பெற்ற இந்த பிளாக் காபி பல் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.இந்த நிலையில் தொடர்ந்து பிளாக் காபி குடிப்பதால் உடல் எடை குறையும் என “ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்” அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

பிளாக் காபி என்றால், காபி தூளுடன் வெறும் சூடு தண்ணீர் மட்டும் கலந்து மிதமான சூட்டில் குடிப்பதாகும். விருப்பப்பட்டால் தேன் சேர்த்து கொள்ளலாம்.இந்த பிளாக் காபியை தினமும் நான்கு கப் காபி குடித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் சுமார் 4 சதவீதம் வரை குறையும் என கூறப்படுகிறது.

பிளாக் காபி குடிப்பதால் உடல் எடை குறைக்க என்ன காரணம் என இங்கு தெரிந்து கொள்வோம்.,

எடை குறைக்கும் முயற்சி:

டயட், உடற்பயிற்சி, விரதம், பிடித்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, என பல முயற்சிகள் மேற்கொண்டாலும் சிலருக்கு உடல் எடை குறையாமல் அப்படியே இருக்கும்.

அப்படிபட்டவர்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் பிளாக் காபியை முயற்சித்துப் பாருங்கள்.

காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பால் சேர்த்து காபி குடிப்பதைத் தவிர்த்து விட்டு, பிளாக் காபி குடிக்கப் பழகுங்கள். அது உங்கள் உங்களையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். எடையையும் குறைக்கும்.

is black coffee good for weight loss tamil-vidiyarseithigal.com

is black coffee good for weight loss tamil

பசியை கட்டுப்படுத்தும் :

பிளாக் காபியில் இருக்கும் காஃபைன் வளர்ச்சிதை செயல்பாட்டை தூண்டுவதுடன் ஆற்றலையும் அதிகரிக்கிறது, இது பசியை கட்டுப்படுத்துகிறது. ஒரு கப் பிளாக் காபியில் 5.4 கலோரிகள் உள்ளது, இது கலோரி இல்ல பானம் என்றும் அழைக்கப்படுகிறது. சர்க்கரை சேர்க்கப்படும் போது அது கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

what is keto diet in tamil?

கலோரிகளின் மீதான தாக்கம்

பிளாக் காபி குடிப்பது உங்கள் தினசரி கலோரிகளின் அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். கருப்பு காபி வளர்சிதை மாற்ற செயல்பாட்டைத் தூண்டுவதால், அது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது மற்றும் அதிக கலோரிகளை எரிக்கிறது. எனவே தினமும் பிளாக் காபி குடிப்பது உங்களுக்கு எடை குறைப்பிற்கு உதவும். உடற்பயிற்சிக்கு முன் பிளாக் காபி குடிப்பது நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க உதவும்

is black coffee good for weight loss tamil-vidiyarseithigal.com

is black coffee good for weight loss tamil

கொழுப்பை குறைக்க:

பச்சை காபி பீன்ஸ் ஆனது நம் உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. இது உடலில் கொழுப்புகளை எரிக்கும் நொதிகளை அதிகமாக வெளியிட உதவுகிறது. கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. நம் உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மிதமிஞ்சிய கொழுப்புகளை நீக்குகிறது. வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.

வீட்டில் செல்வம் செழிக்க, பிள்ளைகள் நன்றாக படிக்க இந்த மந்திரத்தை சொல்லுங்க..!

பிளாக் காபியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள பிளாக் காபியில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், புரதச் சத்து, கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், துத்தநாகம், வைட்டமின் ஈ, வைட்டமின் பி 6, வைட்டமின் பி 2, வைட்டமின் பி 3, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன.

  • கலோரிகள் : 2.4
  • கொழுப்பு : ௦ கிராம்
  • சோடியம் : 4.8 மில்லி கிராம்
  • கார்போ ஹைட்ரேட் : ௦ கிராம்
  • நார்ச்சத்து : ௦ கிராம்
  • புரதச்சத்து : ௦.3 கிராம்
  • பொட்டாசியம் : 118 மில்லி கிராம்
  • மெக்னீசியம் : 7.2 மில்லி கிராம்

உடல் எடை எவ்வாறு குறைகிறது:

பிளாக் காபி அருந்துவதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இது கெட்ட கொழுப்பை எரிக்க உதவும்.

இதனால் கொழுப்பால் உண்டான உடல் பருமன் குறையும்.

பசியைத் தூண்டும் ஹார்மோன் ஆன பெப்டைட்டுக்கு எதிராக பிளாக் காபி செயல்படும்.

இதனால் தேவையற்ற கலோரிகள் எடுத்துக் கொள்வதும், உடலில் சேர்வதும் தடுக்கப்படும்.

is black coffee good for weight loss tamil-vidiyarseithigal.com

is black coffee good for weight loss tamil

பொதுவாக பிளாக் காபியில் கலோரிகள் நிறைந்த பால், சர்க்கரை போன்ற பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை.

கலோரிகள் அற்ற பிளாக் காபியை தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை வெகுவாக குறைக்க முடியும். ஆனால் சர்க்கரை கட்டாயம் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

நன்மைகள் :

பிளாக் காபி குடிப்பதால், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க முடியும்.

தினமும் 1 அல்லது 2 கப் பிளாக் காபி குடிப்பதால் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறையும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பிளாக் காபியில் உள்ள காபின் நரம்பு மண்டலத்தை தூண்டி, இரத்தத்தில் அட்ரீனல் அளவை அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

Spread the love
x