Indianrailways: ரெயில்வேயில் வெளியான முக்கிய அறிவிப்பு..! இனி பயணிகளுக்கு நிம்மதி..!
1 min readஇந்திய ரெயில்வேயில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் அவர்களின் குறைகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ள பல விதமான எண்களை தொடர்பு கொள்ள வேண்டி உள்ளது.
இதனிடையே பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் ரெயில்வே துறை ஒரே எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் பயணிகள் 139 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அவர்களின் குறைகள் மற்றும் தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் இந்த எண்ணில் 12 மொழிகளில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் ரெயில்வே கால் சென்டரை பயணிகள் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.
139 தொலைபேசி உதவி எண்ணில், எந்தெந்த சேவைக்கு எந்தெந்த எண்களை அழுத்த வேண்டும் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த விவரம் வருமாறு:-
1- பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிக்கு இந்த எண்ணை அழுத்தினால், கால் சென்டர் அலுவலருடன் உடனடியாக நேரடி இணைப்பு கிடைக்கும்.
2- விசாரணைகள், பி.என்.ஆர். நிலை, ரெயில் வருகை, புறப்பாடு, கட்டணம், டிக்கெட் முன்பதிவு, ரத்து, விழிப்பு அலாரம், உணவு, சக்கர நாற்காலி முன்பதிவு போன்றவை.
4- பொது புகார்கள்.
5- லஞ்சம் தொடர்பான புகார்கள்.
6- பார்சல் மற்றும் சரக்கு தொடர்பான விசாரணைகள்.
7- ஐ.ஆர்.சி.டி.சி.யால் இயக்கப்படும் ரெயில்கள் தொடர்பான விசாரணைகள்.
9- அளித்த புகாரின் நிலை குறித்து அறிய.
* – கால் சென்டர் அலுவலருடன் நேரடியாக பேச.