How to Link Mobile Number with Voter ID Card Online
1 min readHow to Link Mobile Number with Voter ID Card Online
அனைத்து ஆவணங்களிலும் மொபைல் எண்ணை சேர்ப்பது என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் அந்த ஆவணத்திற்கு உரிய நபரை தொடர்பு கொள்ளவும், Mobile Number Verification யை சரிபார்க்க OTP என்ற ஒருமுறை கடவுச்சொல்லை பெறவும் மொபைல் நம்பர் முக்கியமாகும்.
தற்போது ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், சான்றிதழ்கள் போன்ற பல ஆவணங்களுக்கு மொபைல் எண்ணை கொடுத்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டையும் இணைந்துள்ளது. அனைத்து வாக்காளர்களும் தங்களின் Voter ID Card இல் மொபைல் எண்ணை சேர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
How to Link Mobile Number with Voter ID Card Online
Voter ID Card இல் Mobile Number யை Link செய்வதற்கு எங்கும் அலைய தேவையில்லை. நீங்கள் வீட்டில் இருந்தவாறே வெறும் 5 நிமிடத்தில் Online மூலம் மொபைல் எண்ணை சேர்க்க முடியும். இதற்கான முழு செயல்முறையையும் இந்த காணலாம்.
Benefits of Linking Mobile Number with Voter ID Card
நீங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் மொபைல் எண்ணை இணைப்பதால் பின்வரும் பயன்களை பெறலாம்.
- உங்களின் வாக்காளர் அட்டையில் நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் SMS வழியாக எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.
- ஏதேனும் காரணங்களுக்காக வாக்காளர் எண்ணை நீக்குவதாக இருந்தால், அந்த வாக்காளருக்கு தெரிவிக்காமல் நீக்கப்படாது.
- மொபைல் எண்ணை பதிவு செய்த அனைத்து வாக்காளர்களும் e-Voter ID Card யை Download செய்யலாம்.
- எதிர்காலத்தில் தேர்தல்கள் வரும்போது வாக்களிப்பதற்கான இடம், சீரியல் எண்கள் போன்ற விவரங்கள் SMS மூலமாக அனுப்பப்படலாம்.
intermittent fasting weight loss tamil
How to Link Mobile Number with Voter ID Card
பின்வரும் செயல்முறையை பின்பற்றி உங்களின் மொபைல் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் லிங்க் செய்யலாம்.
Step 1: முதலில் www.nvsp.in என்ற இணையதளத்தை அணுகவும்.
Step 2: அதில் Login என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: உங்களின் Username மற்றும் Password யை Enter செய்து Login செய்யவும். ஒருவேளை நீங்கள் இன்னும் கணக்கை பதிவு செய்யவில்லை என்றால், Dont have account, Register as a new user என்பதை கிளிக் செய்து கணக்கை Register செய்யவும்.
Step 4: இடது புறத்தில் உள்ள Application for Correction/Shifting/Duplicate EPIC and Marking என்பதை அழுத்தவும்.
How to Link Mobile Number with Voter ID Card Online
Step 5: ஏற்கனவே Self என்று தேர்வாகி இருக்கும். உங்களின் குடும்ப உறுப்பினருக்கு மொபைல் எண்ணை சேர்ப்பதாக இருந்தால் Family என்பதை தேர்வு செய்யவும். பிறகு Next என்பதை கிளிக் செய்யவும்.
Step 6: இதில் சில தகவல்கள் ஏற்கனவே படிவத்தில் நிரப்பப்பட்டிருக்கும். அதில் இரண்டாவதாக உள்ள Correction of Entires in Existing Electoral Roll என்பதை தேர்வு செய்யவும்.
Step 7: சிறிது கீழே வரும்போது, நீங்கள் எதை Update செய்ய போகிறீர்கள் என்பதை தேர்வு செய்வதற்கான Option வரும். அதில் Mobile No என்பதை டிக் செய்யவும்.
is black coffee good for weight loss tamil
Step 8: கடைசியில் Declaration க்கு மேல உள்ள Mobile No என்ற இடத்தில் உங்களின் Mobile Number யை Type செய்ய வேண்டும். பிறகு Place என்ற இடத்தில் உங்களின் ஊர் பெயரை உள்ளிட்டு Preview என்பதை அழுத்தவும்.
Step 9: இந்த பக்கத்தில் நீங்கள் உள்ளிட்ட மொபைல் எண் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துவிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்களின் படிவம் வெற்றிகரமாக Submit செய்யப்படும்.
இப்பொழுது உங்களுக்கு ஒரு Referance Number தோன்றும். அதை குறித்து வைத்துக்கொள்ளவும். ஏனெனில் இந்த எண்ணின் மூலம் தான் உங்களின் Application யை Track செய்ய முடியும். அதாவது Referance Number மூலம் Application Status யை தெரிந்துகொள்ள முடியும்.