sovereign gold bond meaning in tamil:தங்க பத்திரம் திட்டம் என்றால் என்ன ? எப்படி முதலீடு செய்வது ?

1 min read
sovereign gold bond meaning in tamil-vidiyarseithigal.com

sovereign gold bond meaning in tamil

தற்காலத்தில் முதலீடு என்பது நமது அன்றாட நடைமுறைகளில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.  பின் வரும் காலங்களில் விலைவாசி எப்படி இருக்கும் என தெரியாது, குழந்தைகளின் கல்வி, கல்யாண போன்ற செலவுகளுக்கு இப்போது பலர் சேமிக்க தொடங்கி விடுகின்றனர். பல விதமான முதலீடு திட்டம் மற்றும் முறைகள் உள்ளன. பெரும்பாலான மக்கள் வங்கிகளையே அவர்களது முதல் தேர்வாக வைத்துள்ளனர்.

அதன் பின் சிலர் நகை மற்றும் இடங்களில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது வளர்ந்து வரும் முதலீடு திட்டமாக பங்கு சந்தைகளை கூறலாம். இன்றைய தலைமுறையினர் பங்கு சந்தையில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு பல முதலீடு முறைகள் இருக்கின்றனர். தனியார் மற்றும் அரசாங்கம் சார்பில் பல திட்டங்கள் மூலம் முதலீடு செய்ய முடியும்(sovereign gold bond meaning in tamil) . அரசாங்கத்தின் சார்பில் இருக்கும் ஒரு வகையான முதலீடு திட்டம் தான் தங்க பத்திரம் திட்டம்.

தங்க பத்திரங்களை ஒரு தனி நபர் அல்லது முதலீட்டாளர்கள் என அனைவராலும் முதலீடு செய்ய கூடிய திட்டமாக உள்ளது. முதலீட்டாளர்கள் தங்க நகைகள் அல்லது தங்க கட்டிகளை வாங்குவதற்கு பதிலாக தங்க பத்திரங்களை வாங்குவது தான் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும். தங்க நகைகள் அல்லது கட்டிகளை வாங்குவது குறைக்க கொண்டு வரப்பட்ட திட்டம் இதுவாகும். இந்த திட்டம் மூலம் 2.5 சதவீத கிடைக்கும். இந்த வட்டி விகிதம் 6 மாதம் ஒரு முறை வழங்கபடும். இதுவே தங்கமாக வாங்கினால் அப்படி எதுவும் வட்டி கிடைக்காது(sovereign gold bond meaning in tamil).

நமது நாட்டின் இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் தங்கம் உள்ளது.  இது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பினை உண்டாக்குகிறது.

தங்கத்தின் இறக்குமதியினை குறைப்பதற்காக, 2016ம் ஆண்டு, அரசாங்கம் தங்க பத்திரங்களை (Sovereign Gold bonds) அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிட்டத்தட்ட தங்கத்தினை கட்டிகளாக வாங்குவதற்கு சமமானது. ஆனால், இங்கு தங்க கட்டிகளுக்கு பதிலாக தங்கத்தின் மதிப்பானது காகிதமாகவோ(paper form) அல்லது டிமேட் கணக்காகவோ(Demat Account) இருக்கும். இந்த தங்கபத்திரங்களை தங்க கட்டிகளை போன்று வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியும்(gold bond investment in tamil).

vaccine:கொரோனா தடுப்பூசி சான்று வாட்ஸ் ஆப்பில் பெறுவது எப்படி ?

வரிச்சலுகைகள்: gold bond investment in tamil

தங்க சேமிப்பு பத்திரம், 8 ஆண்டு காலம் முதிர்வு கொண்டது. முதிர்வு காலம் வரை வைத்து இருந்தால், மூலதன ஆதாய வரி கிடையாது. முதிர்வு தொகைக்கு வரி கிடையாது. தங்க சேமிப்பு பத்திரங்கள் மீது கிடைக்கும் வருமான வரிச்சலுகை, தங்க ETF. மற்றும் Gold Mutual Fund கிடையாது. தங்க நகைகள் மீது 3 சதவீத GSTவிதிக்கப்படுகிறது(gold bond investment in tamil).

தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு GST கிடையாது. மேலும் செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகளும் இல்லை. தங்க சேமிப்பு பத்திர முதலீட்டிற்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. இதற்கு TDS பிடித்தம் செய்யப்படுவதில்லை. வட்டி வருமானம், ஒருவரது வருமானத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்(gold bond investment in tamil).

Telegram LINK follow US https://t.me/vidiyarseithigal

வட்டி: sovereign gold bond meaning in tamil

தங்கம் நகையாக கட்டியாக இருந்தால்  வட்டி ஈட்டித் தராது.

உதாரணமாக, ரூபாய். 1,00,000 முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 6% வளருகிறது. என்றால், வருட முடிவில், 1,06,000 மட்டுமே கிடைக்கும்.

தங்கபத்திரத்தை வைத்திருப்பதால் அரசாங்கம் 2.5% வட்டி அளிக்கிறது. இது மிகவும் அருமையான தொரு பணம் பெருக்கும் வாய்ப்பு.

உதாரணமாக, ரூபாய் 1,00,000 முதலீடு ஒரு வருடத்தில், 6% வளருகிறது என்றால், வருட முடிவில், 2.5% வட்டி சேர்த்து, 8.5% வளருகிறது. 1,08,500 என்று கிடைக்கும்.

வரி: gold bond investment in tamil

தங்கம் குறுகிய கால(short term), மற்றும் நீண்ட கால(long term) ஆகிய முதலீட்டின் லாபம்(capital gains) சார்ந்த வரிகள் உண்டு.

தங்க பத்திரத்தின் மீது கிடைக்கும்  வட்டிக்கு மட்டுமே வரிகள் உண்டு.

பங்கு சந்தையில் 3 வருடங்களுக்கு முன் விற்றால், குறுகிய கால லாப வரியை உங்களது வருமானத்திற்கேற்ப செலுத்த வேண்டும்.

5 வருடத்திற்கு பின் 8 வருடத்திற்கு முன்பாக , வருடம் ஒரு முறை பணமாக மாற்ற முடியும். அப்போது, கடன் பத்திரங்களைப் போல், பணவீக்க குறியீட்டு (CII) எண்ணிற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

8 வருடங்கள் முழுவதும் வைத்திருந்து, பணமாக மாற்றும் போது, நீண்ட கால லாபத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

 வாங்குமிடம்: sovereign gold bond meaning in tamil

தங்கம் நாட்டில் உள்ள எந்த ஒரு நகைகடையிலும் வாங்கலாம். அதேபோல தங்க பத்திரத்தை மத்திய ரிசர்வ் வங்கி பத்திரங்களை போல வங்கிகள், அஞ்சலகம் போன்ற பல்வேறு வழிகளில் வாங்க ஏற்பாடு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வழங்கும் போது நீங்கள்  வாங்க  தவறி போய்விட்டீர்கள், என்றால் பங்கு சந்தையில்(secondary market) வாங்கிக் கொள்ளலாம்(gold bond investment in tamil).

ஆபரணமாக மாற்றுவது: sovereign gold bond meaning in tamil

தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சென்று ஆபரணமாக மாற்ற முடியும். ஆனால் தங்க பத்திரம் என்பது  மெய்நிகர் தங்கம் ஒரு பொருளாக உள்ள தங்கம் கிடையாது. எனவே முதலில் பணமாக மாற்றி, அதன்பிறகு  தங்க ஆபரணமாக வாங்க வேண்டும்.

இந்தியாவின் பொருளாதார அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்தினரும் சுமார் 25 பவுன் நகையாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அவசர தேவைக்காக நகைகளை மட்டுமே பணமாக மாற்ற முடியும். ஆபரணத்தேவை இல்லாத பட்சத்தில் முதலீட்டிற்காக மட்டுமென்றால், நீண்ட காலத்தில், தங்கத்தினை விட பல வாய்ப்புகள் உள்ளன(gold bond investment in tamil).

அதிக வளரும் விகிதம் உடைய பங்கு சந்தை சார்ந்த Mutual Funds, கடன் பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதிகள் உள்ளன. எனவே, நீண்டகால நிதி திட்டமிடலில் 5–10% மட்டுமே,  தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்கத்தினை நேரடியாக வாங்குவதை விட, அரசு தங்க பத்திரம் மூலம் வாங்குவது என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவியது போலிருக்கும், முதலீட்டின் பரவாலக்கத்திற்கும் ஏதுவாகும். மேலும், எங்குமே தங்கத்தின் மூலம் கிடைக்காத, அரசாங்கத்தின் தங்கத்திற்கான வட்டி, முதலீட்டினை மேலும் பெருக்க உதவும்.

Spread the love
x