vaccine:கொரோனா தடுப்பூசி சான்று வாட்ஸ் ஆப்பில் பெறுவது எப்படி ?

1 min read
vaccine-vidiyarseithigal.com

vaccine

கொரோனா என்ற பெருந்தொற்று தொடங்கியது முதல் இன்று வரை அதன் பாதிப்பு ஒய்ந்தபாடில்லை. ஆனால் சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். அரசின் தொடர் முயற்சிகளால் பல கட்டுபாடுகள் மூலம் கொரோனா தாக்கம் மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியது. மக்களும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

கொரோனாவிற்கு நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி மின்னல் வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபரின் பெயரில் சான்று அளிக்கபடுகிறது. அந்த சான்று இருந்தால் தான் உள்நாட்டுக்குள்ளும் அல்லது வெளிநாட்டிற்கும் பயணம் மேற்கொள்ள முடியும். சிலர் சான்றினை கையில் வைத்துள்ளனர். சிலர் செல்போனில் டவுன்லோட் செய்து வைத்துகொள்கின்றனர்(vaccine).

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றினை வாட்ஸ்ப்பில் பெற புதிய முறையை மத்திய அரசு அறிமுகபடுத்தி உள்ளது. வாட்ஸ் ஆப்பில் சான்றினை பெறுவது எப்படி என்று பார்க்கலாம். இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் பயணம் மேற்கொள்ளும் போது மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் பயணிகளிடம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்(vaccine) .

post office savings scheme in tamil:வங்கிகையை காட்டிலும் அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு..!சூப்பரான திட்டங்கள்..!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் கையில் இருக்க வேண்டும் என்ற சூழல் இப்போது உள்ளது. திட்டமிட்ட பயணம் என்றால் எல்லாவற்றையும் கையில் சரியாக வைத்திருப்போம். திடீர் பயணம் மேற்கொள்பவர்கள் சோதனை சாவடிகளில் கோவிட்- சர்டிபிகேட் இல்லாமல் சங்கடப்படும் சூழல் உள்ளது.

Telegram channel Follow us : https://t.me/vidiyarseithigal

அந்த சமயத்தில் Message Inbox-க்குள் சென்று தடுப்பூசி(vaccine) போட்ட நாளில் அனுப்பிய லிங்க் தேடுவது, கோவின் தளத்தில் சென்று செல்போன் எண்ணை பதிவு செய்து ஒவ்வொருவருக்கும்  கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் எடுக்கும் பணிகளில் ஈடுபடுவது சிரமத்தை ஏற்படுத்தும். செல்போன்  சிக்னல் சரியாக இல்லையென்றால் மேலும் கால தாமதமாகும்.
இதுபோன்ற சூழலை தவிர்க்க வாட்ஸ்அப்பில் எளிய  முறையில் சான்றிதழை பெறும் வசதியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. MYGOV CORONA HELPDESK மூலம் மிக எளிதாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை பெறலாம்.

கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான எளிய வழிகள்

வாட்ஸ்அப்பில்  Covid Certificate பதிவிறக்கம் செய்வது எப்படி?

+91 9013151515 என்ற எண்ணை செல்போனில் பதிவு செய்து கொள்ளவும்

இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் இருந்து Covid Certificate என டைப் செய்து மெசேஜ் அனுப்பவும்

உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணை பதிவு செய்ய வேண்டும்

அதன்பின் ஒரு குறுஞ்செய்தி வரும். நீங்கள் 1 என டைப் செய்து அனுப்பினால் சான்றிதழ் கிடைத்துவிடும்.இந்த சேவையின் மூலம் கொரோனா தடுப்பூசி  சான்றிதழை மிக வேகமாகவும் எளிதாகவும் பெற முடியும்.

Spread the love
x