how to drink green tea for weight loss Tamil ?

1 min read
how to drink green tea for weight loss-vidiyarseithigal.com

how to drink green tea for weight loss

உடல் எடையை குறைக்க விரும்பினால் உடற்பயிற்சி மட்டும் போதாது. அத்துடன் சேர்த்து பல உணவு கட்டுப்பாடு வேண்டும். அவ்வாறு தீவிர உனவு கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான் உடல் எடையை குறைக்க முடியும். இல்லையென்றால் என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் பலனில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கிரீன் டீ என்றால் என்ன?

கிரீன் டீ மற்றும் பிளாக் டீ இரண்டுமே ஒரே தாவர குடும்பமான கமில்லியா சைனென்சிஸ் என்பதில் இருந்து உருவாக்கப்படுபவையே; இந்தத் தாவரத்தை செயலாக்கும் வழிமுறைகளில்தான் அது கிரீன் அல்லது பிளாக் டீயாக மாறுகிறது.

கமில்லியா சைனென்சிஸ் என்பது சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட தேயிலை வகை. இது புதர் தாவரமாக, வறண்ட ஆனால் குளிர் வானிலை நிலவும் பகுதிகளில் வளரக்கூடியது. இந்த வகை தேயிலைகள் மிகவும் குளிர்ந்த வெப்பநிலைகளை நன்கு தாங்கிக் கொள்ளும் திறனுடையது.

how to drink green tea for weight loss-vidiyarseithigal.com

how to drink green tea for weight loss





கமில்லியா சைனென்சிஸ் அஸ்ஸாமிக்கா என்பது பெரிய இலையைக் கொண்ட தேயிலை வகை. பெரும்பாலும் பிளாக் டீ உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது அஸ்ஸாமில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது, வெப்பமான, ஈரப்பதமுள்ள வானிலை நிலவும் பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

ஒரே மாதத்தில் 7 kG..! இந்த 4 விஷயம் செஞ்சா போதும்..!

கிரீன் டீ செயலாக்கும் நடைமுறைகள் என்பது தேயிலைகளைப் பறித்து, அவற்றை உடனடியாக பாத்திரத்தில் வறுத்து (சீன வழிமுறை) அல்லது நீராவியில் வேகவைத்து (ஜப்பானிய வழிமுறை) அதன் பிறகு உடனடியாக உலர்த்துவதன் மூலம் ஆக்சிடைஸ் ஆவது தடுக்கப்படுகிறது.

இதுவே பிளாக் டீ செயாலக்கும் முறையில், பறிக்கப்பட்ட தேயிலைகள் முழுமையாக ஆக்சிடைஸ் ஆகும் வரை காத்திருந்து, அதன் பிறகு வெப்பத்தால் சீராக்கப்பட்டு, உலர்த்தப்படும்.

தேயிலைகளின் செல் சுவர்களுடன் ஆக்சிஜன் வாயுவின் செயல்பாடுதான் ஆக்சிடைசேஷன் என்றழைக்கப்படுகிறது, இதனால் தேயிலைகள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்துக்கு மாறுகின்றன. அவற்றின் சுவையும் மாற்றமடைகிறது.

கீரின் டீ குடித்தால் உடல் எடை குறையுமா?

எப்படி எல்லாம் எடை குறைக்கலாம் என்று உலகின் கணிசமான மக்கள்தொகை முயற்சி செய்து கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளாக, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள பலரும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் தொடங்கியுள்ளனர். அவற்றில் முக்கியமானது கிரீன் டீ.

 பால் சேர்க்காமல் அப்படியே சூடான நீரில் கலந்து கிரீன் டீயை பருக வேண்டும். சாதாரணமான தேநீரை விட, கிரீன் டீயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, எடை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

how to drink green tea for weight loss-vidiyarseithigal.com

how to drink green tea for weight loss

பெரும்பாலான எடை குறைக்கும் முயற்சிகளில், கிரீன் டீக்கு முக்கிய பங்கு உள்ளது.கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிய முழு விவரங்களை, ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு அறிக்கையாக மார்ச் 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது.

அதில் கிரீன் டீ உடல் பருமனைக் குறைத்து, உடலில் அழற்சி (inflammation) ஏற்படுத்தும் காரணிகளை குறைக்கிறது என அந்த ஆய்வில் தெரியவந்தது. பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு, சயின்ஸ் டெய்லியில் (Science Daily) வெளியிடப்பட்டது.




கீரின் டீ யால் ஏற்படும் நன்மைகள் :

இந்த ஆய்வு இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட பெரிய எலிகள் மீது நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் காலம், எட்டு வாரங்களாகும். மொத்த விலங்குகளின் எண்ணிகையில் பாதி விலங்குகளுக்கு, உடல் பருமனை உண்டாக்கும் அதிக கொழுப்புள்ள உணவுகள் வழங்கப்பட்டன.

மீதமுள்ள விலங்குகளுக்கு, வழக்கமான உணவு வழங்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும், 50% விலங்குகளுக்கு அதன் உணவுகளில் கிரீன் டீ எக்ஸ்ட்ராக்ட் சேர்க்கப்பட்டன.ஆய்வில் பங்கெடுத்த அனைத்து விலங்குகளின் கொழுப்பு திசுக்களின் எடை, அவைகளின் இன்சுலின் தாங்கும் திறன் மற்றும் பல்வேறு காரணிகளும் கணக்கிடப்பட்டன.

how to drink green tea for weight loss-vidiyarseithigal.com

how to drink green tea for weight loss

எட்டு வாரங்கள் முடிந்த பிறகு, விலங்குகளின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து பின்வரும் முடிவுகள் வெளியிடப்பட்டன.அதிக கொழுப்பு உணவுகள் வழங்கப்பட்ட விலங்கை விட, கிரீன் டீ சேர்க்கப்பட்டு அதிக கொழுப்பு உணவுகள் வழங்கப்பட்ட விலங்குகள், 20 சதவிகிதம் குறைவான அளவு எடை அதிகரித்திருந்தன.

 முகம் பள பளக்க இதை பண்ணுங்க..!

அது மட்டுமின்றி, கிரீன் டீ சப்ளிமென்ட் உண்ட விலங்குகளில் கொழுப்பு திசுக்கள் மற்றும் குடல்பகுதியில் குறைவான அழற்சியே காணப்பட்டன.மேலும் எண்டோடாக்சின் எனப்படும் உடலுக்குள் நச்சுத்தன்மை வாய்ந்த பாக்டீரியாவின் பரவலை எதிர்த்து பாதுகாப்பு வழங்கியதோடு மட்டுமில்லாமல், அது ரத்தத்தில் கலக்காமலும் தடுத்தது.

அதிக கொழுப்புள்ள உணவை சாப்பிட்டாலும், வயிற்றுப்பகுதியில் ஆரோக்கியமான நுண்கிருமிகள் உருவாக உதவி செய்தது.




கிரின் டீயை எப்படி குடிக்க வேண்டும்?

கிரீன் டீயை நீங்கள் தண்ணீர் போல குடிக்க குடிக்கக் கூடாது என்று ஓஹியோ பல்கலைக்கழக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, நாள் முழுவதும், குறிப்பிட்ட நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உணவுடன் கிரீன் டீ குடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

நன்மைகள் மனிதர்களில் உண்மையாக நிரூபிக்கப்பட வேண்டுமா – பச்சை தேயிலை சப்ளிமெண்ட்ஸ் தேநீரில் உள்ள கேடசின்களை உடல் எவ்வாறு வளர்சிதைமாக்குகிறது என்பதன் காரணமாக, ஒரு நாள் முழுவதும் பானம் குடிப்பதற்கு வெளிப்படையான மாற்றாக இருக்காது என்றும் தெரிவிகின்றனர்.




“இந்த ஆய்வில் எலிகள் செய்ததைப் போல – ஒரு நாள் முழுவதும் சிறிது உணவை உட்கொள்வது சிறந்தது” என்று ஊட்டச்சத்து நிபுணர் புருனோ கூறுகிறார்.

 

 

Spread the love
x