how to create best youtube channel ..!

1 min read
how to create best youtube channel-vidiyarseithigal.com

how to create best youtube channel

பொதுவாக கொரோனா காலகட்டத்திற்கு பலர் யூடியுப் பக்கம் திரும்பியுள்ளனர். காரணம் ஒரு நிரந்தர வருவாய் உள்ளதாக யூடியுப் தளம் மாறியுள்ளது. இப்போது அதில் நீங்கள் போடும் உழைப்பு பிற்காலத்தில் உங்களுக்கு நல்ல பலனை அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது. யூடியுப் வலைதளம் தொடங்குவது மிகவும் எளிதான ஒன்று என பலர் எண்ணுகின்றனர்.

உடனடியாக முடிவெடுத்து உடனடியாக ஒரு யூடியுப் பக்கத்தை தொடங்கி விடுகின்றனர் . அப்படி செய்வதால் எந்தவித பலனும் இல்லை. ஒரு யூடியுப் தளத்தை தொடங்குவதற்கு முன் பல விஷயங்களை சிந்திக்க வேண்டும் . பின்னர் நாம் எப்படி முடிவெடுத்தோமோ அதன் படி அதனை கொண்டு செல்ல வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நம் இலக்கை எளிதாக அடைய முடியும் .

சேனலின் வகை :

சேனல் தொடங்குவதற்கு முன் நாம் எந்த வகையான சேனலை தொடங்க போகிறோம் என்பதனை நாம் முதலில் முடிவு செய்ய வேண்டும். உங்கள் சேனலின் மைய புள்ளி அதாவது எந்த வகையான வீடியோக்களை மட்டும் அதில் பதிவேற்ற போகிறீர்கள் என்பதனை முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக டிராவல் வீடியோஸ், உணவு பொருட்கள் குறித்த வீடியோஸ், டெக் வீடியோஸ் என பல உள்ளது . அதில் நீங்கள் எந்த வீடியோக்களை தொடர்ந்து பதிவிட போகிறீர்கள் என்பதனை உறுதி செய்து முடிவெடுக்க வேண்டும்.

youtube channel ideas tamil..! part 2

சேனல் பெயர் மற்றும் லோகோ:

எப்போதுமே உங்களுகென ஒரு அடையாளம் இருக்க வேண்டும். அப்போது தான் மக்களிடம் எளிதில் சென்றடைய முடியும். அதற்காக தான் உங்கள் சேனலுக்கு நல்ல பெயர் மற்றும் லோகோவை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் லோகோ உங்கள் புகைப்படமாக கூட இருக்கலாம். ஆனால் மக்களை கவரும் வித்தியாசமான லோகோ மற்றும் பெயர் வைத்தால் அதுவே பலரிடம் உங்களுக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தரும் .

how to create best youtube channel-vidiyarseithigal.com

how to create best youtube channel

எடிட்டிங்க்:

நீங்கள் சாதாரணமான சேனல் தொடங்கினாலும் சரி அல்லது மிகப்பெரிய சேனல் தொடங்கினாலும் சரி நல்ல எடிட்டிங்க் எப்போதுமே சேனலுக்கு நல்ல காட்சிகளை காட்டும் . காட்சிகள் நன்றாக இருந்தால் தான் பார்வையாளர்கள் தொடர்ந்து வீடியோக்களை பார்க்க வருவார்கள் . தரமற்ற காட்சிகள் எப்போதும் பார்வையாளகளை கவராது. அதை போல நீங்கள் பதிவிடும் காட்சிகளும் முடிந்த அளவு சேக் இல்லாமல் நன்றாக தெளிவான காட்சிகளை கொண்டு பதிவிட வேண்டும். நல்ல விஷ்யூல் நிறைந்த காட்சிகள் எப்போதுமே நிறைய பார்வையாளர்களை கொண்டு வரும் என்பட்ஹே உண்மை.

காபிரைட்ஸ் :

அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான் யூடியிப்பில் பிரச்சனைகுரிய முக்கியமான விஷயம் காபிரைட்ஸ் தான் . நீங்கள் பதிவேற்றும் வீடியோக்களில் பிற யூடியுப் வலைத்தளங்களின் காட்சிகள் அல்லது படத்தின் காட்சிகள் அல்லது பாடல்கள் இசை இவை போன்றவை இடபெற்று இருந்தால் நிச்சயம் காபிரைட்ஸ் பிரச்சனையை சந்திக்க நேரிடும். முடிந்த அளவு பிறர் பயன்படுத்திய காட்சி மற்றும் இசையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற பல நுனூக்கம் உள்ளது அவற்றை பார்த்து தான் நாம் வீடியோக்களை பார்த்து பதிவிட வேண்டும். அதுபோல நமது சேனலுக்கு என்று ஒரு அடையாளத்தை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் . அவ்வாறு செய்வதன் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெறலாம்.

 

 

Spread the love
x