Tamil online news: உங்க செல்போனிலேயே வாக்காளர் பட்டியல்..! சரி பார்ப்பது எப்படி?

1 min read
tamil online news-vidiyarseithigal.com

Tamil online news:

இன்றைய நவீன உலகில் அனைத்து விதமான வசதிகளும் செல்போன்களில் வந்துவிட்டது. பேருந்து கட்டணம் முன்பதிவு முதல் விமான கட்டணம் முன்பதிவு வரை அனைத்தையும் நாம் செல்போன் மூலம் செய்து விடலாம்.

அதைபோல தான் வாக்காளர் பட்டியல் சரியாக உள்ளதா அல்லது ஏதேனும் தவறாக உள்ளதாக என்பதை நமது செல்போன் மூலம் சரிபார்த்து விடலாம். அதற்கு உங்களுடைய மொலைலில் இருந்து https://electoralsearch.in என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும் .

இந்த பக்கத்திற்கு சென்ற பிறகு உங்கள் பெயரை உள்ளிட வேண்டும் அதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என தெரிந்து கொள்ளலாம். சில நேரங்களில் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருக்கலாம் . அதன் காரணமாக உங்கள் பெயர் அதில் வராமல் போகலாம் .

எனவே வாக்காளர் அடையாள அட்டையில் EPIC எண் கொடுக்கபட்டிருக்கும் . இவற்றை கொண்டு உங்கள் பெயரை நீங்கள் உள்ளதா என உறுதி செய்து கொள்ளலாம். இதற்கும் அதே இணைய முகவரியில் search by epic no என இருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் உங்கள் epic no ஐ பதிவிட வேண்டும்.

Spread the love
x