highcourt: ஆடைமீது தொட்டு பாலியல் தொல்லை செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் வராது – அதிருப்தி அளித்த மும்பை உயர்நீதிமன்றம் கருத்து..!

1 min read
highcourt-vidiyarseithigal.com

highcourt

குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து காக்க போக்சோ சட்டம் உருவாக்கபட்டது. POCSO– Protection of children from sexual offences act எனப்படும் போக்சோ சட்டம் குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்படுபவர்கள் மீது பாய்கிறது.

கடந்த 2012ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம்  குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யபடும் நபர் மீது எதிராக பதியப்படும் வழக்கினை 3 மாதங்களுக்குள் விசாரணை செய்து முடித்து அந்த நபருக்கு தண்டனை வழங்க வேண்டும் .

இந்நிலையில் இந்த சட்டம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பென்ச் கூறியிருக்கும் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு 39 வயதான நபர் ஒருவர் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

highcourt-vidiyarseithigal.com

இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா விசாரணை செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை உடலோடு உடல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை என எடுத்துக்கொள்ளப்படும்.

ஆனால் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவர் அணிந்து இருக்கும் ஆடை மீது தொட்டு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது. அது துன்புறுத்தல் மட்டுமே என கூறினார். எனவே குற்றம்சாட்டபட்ட நபர் பாதிக்கபட்ட சிறுமியின் ஆடையை அகற்றாமல் தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும் 

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் ரீதியான குழந்தைகளின் தனிப்பட்ட உறுப்புகளை தொடுதல், தாக்குதல் நடத்துதல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட உறுப்புகளை தொட வைத்தல் ஆகியவையே உள்ளடக்கியது பாலியல் வன்கொடுமை ஆகும்.

மேலும் ஒருவரை அவரது விருப்பம் இல்லாமல் பாலியல் நோக்கத்தில்  தொடுவது ஆங்கிலத்தில் Groping எனப்படும். இந்த செயல் பாலியல் குற்றமல்ல என தீர்ப்பளித்து குற்றவாளியை விடுதலை செய்துள்ளார். நீதிபதியின் இந்த தீர்ப்பு தற்போது விவாத பொருளாகி உள்ளது.

Spread the love
x