health tips tamil:இரவு தூக்கத்தை தொலைத்தால் இதெல்லாம் பாதிப்பா?
1 min readhealth tips tamil
இன்றைய நவீன உலகில் பலர் இரவு நேர தூக்கம் என்பதனை மறந்துவிட்டனர். லேட் நைட் வேலை, விழாக்கள் என பலர் இரவு நேரங்களில் தூங்குவதை குறைத்து கொண்டுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் இரவு நேர கொண்டாட்டங்களை முடித்து கொண்டு அதன் பின் தூங்க வருகின்றனர்(how to get good sleep) . அவர்கள் வரும் நேரத்தில் சூரியனும் வந்து விடுகிறது. உடனடியாக குட்டி தூக்கம் போட்டுவிட்டு வேலைக்கு செல்கின்றனர்.
குறிப்பாக சமூக வலைத்தள பயன்பாடுகள் அதிகரித்த பின் பலரது தூக்கம் பாதியாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். முன்பெல்லாம் இரவு 9 மணி ஆணாலே பலரது வீட்டில் தூங்க சென்று விடுவார்கள். ஆனால் இன்றைய உலகில் வேலைகளுக்கு சென்றவர்கள் வீடு திரும்பி, பின் அவர்கள் அனைவரும் உணவு உட்கொண்டு அதன் பின் சிறிது நேரம் பேசி கொண்டு, இறுதியாக செல்போணை சிறிது நேரம் பயன்படுத்தி விட்டு உறங்க செல்கின்றனர்.
இதன் காரணமாகவே இன்றைய உலகில் பலர் தூக்கம் இல்லாமல் சுற்றி வருகின்றனர். இப்படி நெடு நேரமாக தூங்காமல் இருப்பது உடலுக்கு பல உபாதைகளை (health tips tamil) கொண்டு வரும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் அதனை யாரும் கண்டு கொள்வதாக தெரிவதில்லை.இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஒரு மனித உடலுக்கு சராசரியாக இவ்வளவு நேரம் தூங்க வேண்டும் (how to get good sleep) என்று ஒரு கோட்பாடு. அதிக நேரம் தூங்குவதும் தொல்லை தரும் குறைவாக தூங்கினாலும் தொல்லை தரும். சராசரியாக 6 முதல் 8 மணி நேர தூக்கம் என்பது மனிதனுக்கு அவசியமான ஒன்று ஆகும். இன்னும் தெளிவாக குறிப்பிட்டால் தூங்குவதற்கு சரியான நேரம் இரவு 10 மணி முதல் காலை 6 ஏனெனில், அப்போதுதான் ‘மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாக சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் மேம்படும்.மணி வரை தான்.
சிலர், வேலை காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம் (health tips tamil). அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல.
health tips tamil
பேஸ்புக்கில் அப்லோடு செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது கமெண்ட் செய்திருக்கிறார்களா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து செல்போனை சோதனை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வகையில் மனரீதியான பிரச்சினைகள்தான். இவர்கள் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையை அடைவதே இல்லை.
health tips tamil:மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா? படிச்சு பாருங்க..!
தூக்கம் கெடுவதால் (health tips tamil) உடல் சோர்வு, அஜீரணம், கண் எரிச்சல், உடல் உஷ்ணம் அடைதல் போன்ற பல பாதிப்புகள் உண்டாகின்றன. தூக்க நேரம் தவறுவதால் உணவு எடுத்துக் கொள்ளும் நேரமும் மாறுபடுகிறது. இதனால் மேலும் செரீமான கோளாறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இந்தபிரச்சினையை மருத்துவ ஆலோசனை யின் பேரில் சில வகை தெரபி, மெலட்டோனினை சுரக்கவைக்கும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும். இதுபோன்ற முறையற்ற தூக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி, குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு செல்போனை தள்ளி வைத்துவிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதுதான்.