hdfc mutual fund tamil: தினமும் ரூ.333 முதலீடு செய்தால் 26 வருடத்தில் ரூ.9 கோடி வருமானம்…!

1 min read
hdfc mutual fund tamil-vidiyarseithigal.com

hdfc mutual fund tamil

இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் சேமிப்பு கணக்குகளை காட்டிலும் முதலீடு கணக்குகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்பெல்லாம் பலருக்கு முதலீடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது பலர் பல முதலீடு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்கின்றனர்.

அந்த வகையில் முதலீடுகளில் சிறந்த ஒன்றாக இருந்து வருவது மியூட்சல் பண்ட்கள் ஆகும். ஒருவர் நீண்ட காலத்திற்கு அதாவது 20 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்ய விரும்பினால் அவர்களுக்கான சிறந்த முதலீடு மியூட்சல் பண்ட்கள் தான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாள் தோறும் ரூ.333 அதாவது மாதம் ரூ.10 ஆயிரம் 26 வருடத்திற்கு முதலீடு செய்தவர்கள் தற்போது ரூ.9 கோடிக்கும் மேல் பெற்றுள்ளனர்.

வரி விலக்கு

ELSS மியூச்சுவல் என்பது ஒரு வகை ஈக்விட்டி ஃபண்ட் ஆகும். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கும் ஒரே பரஸ்பர ஃபண்ட் ஆகும். இதன் மூலம் ஒரு வருடத்தில் ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும். ELSS ஃபண்ட் மிகவும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, லார்ஜ் கேப், மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் நிறுவனங்கள் உட்பட பல்வேறு மார்க்கெட் கேப் கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர்.

hdfc mutual fund tamil-vidiyarseithigal.com

hdfc mutual fund tamil

நீண்ட கால முதலீடு

ELSS மியூச்சுவல் ஃபண்ட் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து தொடர்ந்து முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றன. இந்த ஃபண்ட்களை பொறுத்தவரை, நீண்ட காலத்திற்கு மிகப்பெரிய வருமானத்தை அளிக்கும். மேலும் ELSS ஃபண்ட் மூலம், ஆண்டுக்கு ரூ.46,800 வரியாக சேமிக்கலாம்.

benefits of ginger water in tamil

HDFC வரி சேமிப்பு ஃபண்ட்

HDFC வரி சேமிப்பு ஃபண்ட் என்பது மிகப்பெரிய வருவாய் அளித்த ELSS ஃபண்ட்களில் ஒன்று. இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, ரூ.9 கோடிக்கு மேல் உரிமையாளர்களாகிவிட்டனர்.

hdfc mutual fund tamil-vidiyarseithigal.com

hdfc mutual fund tamil

26 வருடங்களில் ரூ 9.39 கோடி

HDFC வரி சேமிப்பு ஃப்ண்ட் கடந்த 1996ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. HDFC வரிசேமிப்பு ஃபண்ட் 26 ஆண்டுகளில் அதாவது மார்ச் 31, 2022 நிலவரப்படி, இந்த ஃபண்ட் ஆண்டுக்கு 21.27 சதவீத SIP வருமானத்தை அளித்துள்ளது. அதன்படி, ஃபண்ட் தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு மாதமும் HDFC வரி சேமிப்பு ஃபண்டில் ரூ. 10,000 (தினசரி ரூ. 333) முதலீடு செய்த முதலீட்டாளர் இதுவரை முதலீடு செய்த தொகை வெறும் ரூ. 31.20 லட்சம் மட்டுமே. ஆனால் இன்று முதலீட்டாளர்களுக்கு ரூ 9.39 கோடி கிடைத்துள்ளது

hdfc mutual fund tamil-vidiyarseithigal.com

hdfc mutual fund tamil

எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு

HDFC வரி சேமிப்பு ஃப்ண்ட் பல்வேறு துறைகளில் முதலீடு செய்கிறது. நிதி, ஆட்டோமொபைல், எரிசக்தி, சுகாதாரம் முதல் தொழில்நுட்பத் துறை ஆகியவை இதில் அடங்கும். ஐசிஐசிஐ வங்கி லிமிடெட், ஹெச்டிஎஃப்சி வங்கி லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவை இந்த நிதியின் முதல் 5 பங்குகளாகும். உள்நாட்டுப் பங்குகளில், ஃபண்ட் 95.52% வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது. இதில், 84.71% லார்ஜ்கேப் நிறுவனங்களும், 7.56% மிட் கேப் பங்குகளும், 3.25% ஸ்மால் கேப் பங்குகளும் அடங்கியுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x