green tea benefits in tamil: கீரின் டீ உடல் எடையை குறைக்குமா?

1 min read
green tea benefits in tamil-vidiyarseithigal.com

green tea benefits in tamil

இன்றைய உலகில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால் பலருக்கு உடல் எடை அதிகரித்து கொண்டே உள்ளது. அதனை கட்டுபடுத்த பல வகைகளில் முயற்சி செய்து வருகின்றனர். உடல் பயிற்சி, யோகா, டையட் என பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் பலரால் உடல் எடையை குறைக்க எடுக்கின்றன ஒரு முயற்சி தான் கீரின் டீ குடிப்பது. இதனை பருகுவதால் உடல் எடையை குறைக்க முடியும் என சில ஆய்வு தகவல்கள் கூறுகின்றன. கீரின் டீ குடிப்பதால் எப்படி உடல் எடை குறைக்க முடியும் என பலருக்கு சந்தேகம் இருந்து கொண்டு தான் உள்ளது.

கீரின் டீ யில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைக்க பெரிய வகையில் உதவி புரிகின்றன. நீங்கள் குடிக்கும் சாதாரண டீயில் காபைன் அளவு அதிகபடியாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் கீரின் டீ யில் அப்படி இல்லை இதில் மிகவும் குறைவான அளவே காபைன் உள்ளது. அதன் காரணமாகவும் இது உடல் எடையை குறப்பதில் பேருதவியாக உள்ளது.

கீரின் டீ என்றால் என்ன ?

பிளாக் டீயை ஒப்பிடும் போது க்ரீன் டீ தேயிலை இலைகள் குறைந்த ஆக்ஸினேற்ற செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் அந்த இலைகளின் இயற்கையான பண்புகள் தக்க வைக்கப்படுகிறது. ஆனால் பிளாக் டீயை பொருத்து வரை இலைகள் முழுமையாக ஆக்ஸினேற்றம் செய்யப்படுகிறது. க்ரீன் டீயில் கேடசின்கள் எடை இழப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

கீரின் டீ தயாரிக்கும் முறை :

கிரீன் டீ பவுடரை பல பயன்படுத்துகின்றனர். அதற்கு பதிலாக கிரீன் டீ இலைகளை வாங்குவதே சிறந்தது. கிரீன் டீ இலைகளை நீரில் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்துவது நல்லது.

கீரின் டீ குடிக்கும் முறை:

ஆக்ஸிஜனேற்றப்படாத இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் குறைந்த பதப்படுத்தப்பட்ட டீக்களில் ஒன்றான கிரீன் டீ, எடை இழப்பு பற்றிய பேச்சுக்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. பலர் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப்களுக்கு மட்டும் அருந்தி வரும் நிலையில், மற்றவர்கள் ஐந்து கப் வரை கூட உட்கொள்கிறார்கள். ஆனால் மற்ற நன்மைகளுடன் எடை இழப்புக்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சரியான அளவு என்ன? என்பது பலர் அறியாத ஒன்றாக உள்ளது

நமக்கு தேவையான போதெல்லாம் க்ரீன் டீ குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 முறை க்ரீன் டீ குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிக்க கூடாது. அப்படி குடித்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு உண்ட பிறகு 30 – 40 நிமிடங்கள் கழித்து க்ரீன் டீ குடிப்பதே நல்லது. அதே போல இரவு உறங்குவதற்கு முன்பு க்ரீன் டீ குடித்துவிட்டு உரக்கச் செல்ல கூடாது.

கீரின் டீ உடல் எடையை குறைக்க எப்படி உதவுகிறது: (green tea for weight loss)

க்ரீன் டீ இலைகளில் எபிகல்லோகாடெசின் கேலேட் (ஈ.ஜி.சி.ஜி) என்ற பண்பு உள்ளது. இது நம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்புக்கு உதவுகிறது. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. இந்த இலைகளில் காணப்படும் கேடசின்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

முக்கியமாக பார்த்தால் காபியை விட கீரின் டீ யில் காபைன் அளவு குறைவாக உள்ளது. காபைன் குறைவாக உள்ள கீரின் டீ அருந்துவதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை எளிதில் எரிக்க முடியும். மேலும் உடல் பயிற்சி செய்பவர்களுக்கு இது மிகுந்த புத்துணர்ச்சி அளிக்கும்.

green tea benefits in tamil-vidiyarseithigal.com

green tea benefits in tamil

க்ரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதற்கு முதலில் அந்த கொழுப்பை உடைக்க வேண்டும். எனவே இந்த வேலையை செய்ய க்ரீன் டீயில் உள்ள சேர்மங்கள் நோர்பைன்ப்ரைன் (நோராட்ரெனலின்) போன்ற கொழுப்பை எரிக்கும் ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது.

இது நம் உடலில் சுரக்கும் என்சைம்யை தடுத்து நோர்பைன்ப்ரைன் அளவை அதிகரித்து கொழுப்பை உடைக்கிறது. அப்படியே உங்க கொழுப்பு செல்கள் கொழுப்பை உடைக்கும் வேலையை செய்கிறது. பிறகு இவை இரத்த ஓட்டத்தில் கலந்து தசை செல்களுக்கு உடலுக்கு ஆற்றலாக பயன்படுத்தப்படுகிறது.

வெறும் வயிற்றில் கீரின் டீ குடிக்கலாமா?

கீரின் டீயில் உள்ள டானிகள் காரணமாக வெறும் வயிற்றில் இதனை குடிப்பதால் வயிற்றில் அமிலத்தை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக வயிற்று கோளாறுகள் பல ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேறும் வயிற்றில் குடிப்பது உகந்த ஒன்று இல்லை.

Whatsapp Tricks 2021 in Tamil: வாட்ஸ் ஆப்பில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?

உடல் எடை இழப்பு திட்டம் எப்படி?

உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் ஒரு நாளைக்கு முதலில் ஒரு கப் கீரின் டீ என டயட் தொடங்க வேண்டும். பின்னர் மதியம் அல்லது மாலை வேலைகளில் கீரின் டீ எடுத்து வரலாம். இதனை எடுத்துக் கொண்டு வருவது உடலில் நேரடி மாற்றத்தை தராவிட்டாலும். நீங்கள் செய்யும் உடற்பயிற்சி திறனை அதிகரிக்க இது உதவுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 3-4% கேலோரிக்களை எரிக்க உதவுகிறது.

green tea benefits in tamil-vidiyarseithigal.com

green tea benefits in tamil

கீரின் டீ மூலம் தொப்பையை குறைக்க முடியுமா?

தொப்பையில் உள்ள கொழுப்புகள் உடலில் மற்ற பாகம்களில் உள்ள கொழுப்பை காட்டிலும் வித்தியாசமனது. தோலுக்கு அடியில் உள்ள கொழுப்பு உங்கள் அடி வயிற்றில் அடியில் நிலை பெறுகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

இது அதிகபடியான வீக்கத்தை உருவாக்கி டைப் 2 எனப்படும் நீரிழிவு நோயை அதிகரிக்க செய்கிறது. மேலும் இதய பிரச்சனைகள் உருவாக வழிவகை செய்கிறது. கிரீன் டீயில் உள்ள கேடசின்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளுறுப்பு கொழுப்பின் சதவீதத்தை கணிசமாகக் குறைக்கின்றன என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது. எனவே இன்றே உங்க தொப்பையை குறைக்க வேண்டும் என்றால் க்ரீன் டீ பருகி வரலாம்.

green tea benefits in tamil-vidiyarseithigal.com

green tea benefits in tamil

green tea benefits in tamil and health benefits of green tea

கொலஸ்ட்ரால்

கிரீன் டீயில் இருக்கும் சில ரசாயனங்கள் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடலின் இயக்கத்திற்கு தேவையான அத்தியாவசிய கொழுப்புகளை சீர்படுத்தி, உடலுக்கு நன்மையை அளிக்க செய்கிறது. ஆக மொத்தம் உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு சேர்மானத்தை சமசீரான அளவில் வைக்கிறது.

புற்று நோய்

இன்று உலகெங்கிலும் அதிகளவில் மக்கள் பல வகையான புற்று நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். கிரீன் டீ பருகுபவர்களுக்கு அந்த தேயிலைகளில் இருக்கும் “பாலிபெனால்” எனப்படும் ரசாயனம் கேன்சர் செல்களை கொன்று, அது மீண்டும் உருவாகாத தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 இதய நோய்கள்

ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை கிரீன் டீ அருந்துபவர்களுக்கு இதயம் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும் ஆபத்து குறைவதாக ஜப்பான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதிலிருக்கும் “கேட்டச்சின்” எனும் வேதிப்பொருள் இதயத்தை காப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சிறந்த டயட்டிற்கு:

ஒரு கப் கிரின் டீயில் 30-50 மிகி காப்ஃபைன் உள்ளது. கிரீன் டீ எடையைக் குறைக்கும் என ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக குடித்தால், பக்கவிளைவுகளுடன் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். இதனை அளவாக தினமும் கப் என குடித்து வர பாதுகாப்பான வழியில் உடல் எடை குறையும். ஆகவே எடையைக் குறைக்க உதவும் பானங்களுள் சிறந்த ஒன்றாக கிரீன் டீயை சொல்லலாம்.

நோயெதிர்ப்பு சக்தி :

கிரீன் டீயில் தயனைன் உள்ளது. இந்த அமினோ அமிலம், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-பாடிகளை வழங்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.

வாய் துர்நாற்றம்: கிரீன் டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.

ஞாபகத்திறன்

கிரீன் டீயை அதிகம் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தேயிலையில் இருக்கும் மூலப்பொருட்கள் மூளையில் இருக்கும் செல்களை தூண்டி, ஞாபகத்திறனை மிகுதியாக மேம்படுத்துகிறது. “அல்சைமர்” எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதை கிரீன் டீ தடுப்பதாக கூறுகிறார்கள்.

Spread the love
x