franchise ideas: Franchise பிசினஸ் என்றால் என்ன? லாபமா? நஷ்டமா?

1 min read
franchise ideas-vidiyarseithigal.com

franchise ideas

franchise ideas

உலகில் பல்வேறு வகையான தொழில் தொடங்க யோசனைகள் முன்னெடுக்கபட்டு பலர் அதன் அடிப்படையில் தொழில்களை தொடங்கி வருகின்றனர். சிலர் யோசனைகள் இருந்தும் அந்த தொழிலில் ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று எண்ணி தொழிலை தொடங்காமல் விட்டுவிடுகின்றனர்.

Franchise என்றால் என்ன?

நாம் எப்போது ஒரு தொழிலை தொடங்க வேண்டுமென்றாலும் முதலில் அந்த தொழிலுக்கான மூலப்பொருளை மக்களிடம் சேர்க்க வேண்டும். அதாவது நம் தொழிலின் அடிப்படையான நம் தொழிலின் பெயரை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். நாம் புதிதாக ஒன்று உருவாக்கி மக்களிடம் சென்று சேர்க்க நமக்கு நீண்ட நாட்கள் எடுக்கும்.

ஆனால் முன்னரே மக்களிடம் நன்கு பரீட்சயமான பிராண்டினை நாம் தொழிலாக செய்தால் எளிதாக மக்களிடம் சென்று சேர்க்க இயலும் அதன் காரணமாக தான் பெரும்பாலான புதிதாக தொழில் தொடங்கும் நபர்கள் Franchise போன்று தொழில் model-ஐ நாடுகின்றன.

Franchise model நாம் தேர்வு செய்தோம் என்றால் நாம் தொழில் தொடங்க வேண்டிய இடம் முதல் அனைத்து Infrastruture களையும் franchise எடுக்கும் நிறுவனமே செய்து தருகின்றன.

Franchise எவ்வாறு எடுப்பது?

நாம் எந்த தொழிலினை தேர்வு செய்ய போகிறோம் என்பதை முதலில் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக தற்போது நீங்கள் ஒரு Tea shop Franchise மூலம் தேர்வு செய்ய போகிறீர்கள் என்றால் முதலில் அந்த வகை Franchise எத்தனை நிறுவனங்கள் அளிக்கின்றன என்பதனை நீங்கள் கண்டறிய வேண்டும்.

பின் அந்த நிறுவனத்திடம் நீங்கள் PDF File யினை பெற வேண்டும். அதில் அவர்கள் எவ்வளவு சதுர அடியில் உங்கள் கடை அமைய வேண்டும் எனது முதல் நீங்கள் முதலீடு செய்த பணத்தை எத்தனை நாட்களில் எடுப்பீர்கள் என்பது வரை அவர்கள் அதில் குறிப்பிட்டு இருப்பர்.

பல்வேறு வகையான Franchise நிறுவனங்களை முதலில் அணுகி அவர்களில் சிறந்த மற்றும் தரமான Franchise எது என்பதனை நீங்கள் கண்டறிய வேண்டும். பின் தேர்வுகள் முடிந்த உடன் அவர்களிடம் உரிய ஆவணங்கள் மற்றும் பணத்தை செலுத்தி நீங்கள் franchise எடுத்து விடலாம்.

Royalty என்றால் என்ன?

Franchise பிசினசில் முதலில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் royalty ஆகும். ஆம் இப்போது நீங்கள் ஒரு நிறுவனத்திடம் franchise எடுக்கீறிர்கள் என்றால் அந்த நிறுவனத்திற்கு நீங்கள் மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும் அதன் பெயரே royalty ஆகும். இந்த தொகையானது லாபத்தின் percentage அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையாக franchise எடுக்கும் நிறுவனம் வசூலிக்கும்.

franchise ideas லாபம் தருமா?

Franchise பிசினஸ் பெரும்பாலானவை லாபத்தையே தருகின்றன. குறிப்பாக நாம் தேர்வு செய்யும் மாடலை பொறுத்துதான் நாம் எந்த அளவில் லாபத்தை ஈட்ட போகிறோம் என்பது உறுதி செய்ய முடியும். மேலும் நாம் பிசினஸ் மாடலை எந்த இடத்தில் வைக்க தேர்வு செய்கிறோம் என்பதும் இதில் அடங்கும்.

சொந்த தொழில் தொடங்க வேண்டும் ஆனால் தொழிலில் முன் அனுபவம் இல்லை எங்கு தொழில் தொடங்கினால் நஷ்டத்தை சந்திக்க நேரிடுமோ என கலக்கத்தில் இருப்பவர்களுக்கு இந்த வகை Franchise பிசினஸ் சிறந்த பிசினஸ் மாடலாக உள்ளது.

Spread the love
x