fau g game இந்தியாவில் குடியரசு தினத்தன்று வெளியாகும் Fau-g ..! ஆர்வமுடன் காத்திருக்கும் விளையாட்டு பிரியர்கள்..!

1 min read
fau g game-vidiyarseithigal.com

fau g game

இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்களால் அதிகம் விளையாடபட்ட விளையாட்டாக pubg இருந்து வந்தது. ஆனால் சில காரணங்களால் இந்தியாவில் அந்த விளையாட்டு தடை செய்யபட்டது. அதன் பின் அதனை போலவே FAU G  என்ற விளையாட்டு வெளிவரும் என சொல்லபட்டது.

இந்நிலையில் இந்தியாவில் ஜனவரி 26ம் தேதி faug விளையாட்டு வெளிவரும் என ncore கேம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும் இந்த விளையாட்டை டவுன்லோட் செய்ய முன் கூட்டியே பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாள் கிட்டதட்ட ஒரு மில்லியன் நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த விளையாட்டு லடாக் பகுதியில் உள்ள இந்திய வீரர்களை அடிப்படையாக கொண்ட விளையாட்டாகும் . சமீபத்தில் வெளியான டீசர் fau g game விளையாட்டின் கீதம் மற்றும் வீரர்கள் பள்ளத்தாக்கில் எதிரிகளை எதிர்த்து போராடுவதைக் காண்பித்தது.

தொடக்கத்தில் ஒற்றை பிளேயர் முறையும் , பின்னர் மல்டி பிளேயர் முறை வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. மற்ற பேட்டில் கேம்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.

Spread the love
x