RIP: பில்லா 2, நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்த பிரபலம் காலமானார்..! வருத்தத்தில் ரசிகர்கள்..!
1 min readரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, உஸ்தாத் ஹோட்டல், கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வைத்து நடித்து வந்தவர்.
கொரோனா காலகட்டத்தில் பால் வாங்க கூட காசு இல்லாமல் இருப்பதாக இவர் வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது. அதனை பார்த்த திரைப்பட பாடலாசிரியர் சினேகன் இவருக்கு உதவிக்கரம் நீட்டினார். இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு இயக்குநர் சீனுராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தீப்பெட்டி கணேசனுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.