cinemanews: அட முந்தானை முடிச்சு படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம்..! இப்போ விஜய்டிவில இந்த சீரியல் நடிகையாம்..!

1 min read
cinemanews-vidiyarseithigal.com

cinemanews

தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனர் மற்றும் நடிகராக இருப்பவர் பாக்யராஜ். அவர் ஹீரோவாக நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் பாக்யராஜுடன் நடிகை ஊர்வசி , தீபா , கே.கே.சௌந்தர்  உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இப்படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை அடுத்த ஹிந்தி, கன்னடம் ,தெலுங்கு என பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

cinemanews-vidiyarseithigal.com

முந்தானை முடிச்சு படத்தில் மனைவியை இழந்த பாக்யராஜ் கைக்குழந்தையுடன் கஷ்டப்படுவார். பின்னர் அவரை ஊர்வசி திருமணம் செய்து கொள்வார். அதன்பின் அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதையாகும்.

இப்படத்தில் பாக்யராஜின் குழந்தையாக நடித்திருப்பது வேறு யாரும் இல்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்சில் தனம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜிதாவாம்.

Spread the love
x