mayilsamy: ஏன் இப்படி செய்தாய்? மறைந்த நடிகர் மயில்சாமி குறித்து வருத்தம் தெரிவித்த பிரபலம்..!

1 min read
mayilsamy-vidiyarseithigal.com

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான்களில் மயில்சாமியும் ஒருவர். நகைச்சுவை என்பது பேசுவது மட்டும் அல்ல. உடல் அசைவுகளும் தான் என நடித்து காட்டி, அதில் வெற்றியும் கண்டவர். திரையில் நகைச்சுவை செய்து காமெடியனாக வலம வந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ போல வலம வந்தவர்.

தன்னிடம் வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் ஓடி ஓடி உதவி செய்தவர். இப்படி இருக்க கடந்த மகா சிவராத்திரி அன்று பூஜை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் சாப்பிட்டுள்ளார், அதன் பின் அவருக்கு மூச்சுவிட முடியாத அளவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலே அவர் உயிர் பிரிந்துள்ளது.

mayilsamy-vidiyarseithigal.com

mayilsamy

அவர் இறந்த பிறகு தான் அவரின் செயல்கள் குறித்து வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. ஆம், தான் உயிருடன் இருக்கும் வரை பலருக்கு பல உதவிகளை செய்து வந்துள்ளார்.

 முன்னாள் காதலானால் தொல்லை. உடலில் காயங்களுடன் பிரபல தமிழ் நடிகை..!

இந்நிலையில் அவர் இறப்பு குறித்து நடிகர் சிங்கமுத்து பேசுகையில், அவர் தன் குலதெய்வ கோவிலுக்கு சென்றதால் இறுதி மரியாதை செலுத்த வரவில்லை என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் மயில்சாமி ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன் என்றும், தன்னிடம் வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உதவி செய்திடும் மனம் உடையவன் என்றும் கூறியுள்ளார்.

mayilsamy-vidiyarseithigal.com

mayilsamy

இப்படி பலருக்கு உதவி வந்த மயில்சாமி தன் உடல் நலனை பார்த்துக்கொள்ளாதது வேதனையாக உள்ளது என கூறியுள்ளார். நீண்ட நாட்கள் இருந்து பலருக்கு உதவி செய்ய வேண்டிய நீ இப்படி விட்டு பிரிந்துவிட்டாய் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Spread the love
x