யானையை பிடித்து கொண்டு கண்ணீர் விட்ட வன ஊழியர்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!
1 min readநீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே காது கிழிந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ஆண் யானை ஒன்று நடமாடி கொண்டிருந்தது. கடந்த மாதம் 28ம் தேதி கும்கி யானைகள் உதவியுடன் ஆண் யானைக்கு சிகிச்சை அளிக்கபட்டது.
அதன் பின் அந்த யானை குடியிருப்பு பகுதிகுள் வருவதும், சாலையில் நிற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த யானையின் காதில் சிலர் தீப்பந்தம் வைத்துள்ளனர். இதனால் யானையின் காதில் பலத்த காயம் ஏற்பட்டு காது அழுகி விழுந்துள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக மிகுந்த இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த யானையை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். யானைக்கு பயக்கி ஊசி செலுத்தி 2 மணி போராட்டத்திற்கு பின் யானையை லாரியில் ஏற்றியுள்ளனர். அதன் பின் அந்த யானை முதுமலைக்கு கொண்டு செல்லபட்டது.
ஆனால் உள்ளே செல்வதற்கு முன்பே யானை உயிரிழந்துள்ளது. வனதுடையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டும் அந்த யானையை காப்பாற்ற முடியாததால் வேதனை அடைந்துள்ளனர். மேலும் ஒரு ஊழியர் இறந்த யானையின் தும்பிக்கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியது.
இறந்த உடல் பரிசோதனை நேற்று முடிந்தது அதில் யானையின் காதில் தீ வைக்கபட்டது உறுதியானது. வனதுறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.