Egg shell buisness idea in Tamil

1 min read
Egg shell buisness idea in Tamil

Egg shell buisness idea in Tamil

இன்றைய உலகில் பெரும்பான்மை இளைஞர்கள் தொழில் தொடங்கி அதில் வெற்றி பெறவே விரும்புகிறீர்களா. தொழில் என்ற உடன் பலர் முதலில் யோசிப்பது உணவு தொழில் தான். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு முக்கியமான ஒன்றாக உணவகம் இருந்தன. இதர கடைகள் அனைத்தும் அடைக்கபட்டாலும் உணவகம் மட்டும் அடைக்கபடவில்லை.

அதன் காரணமாக பலர் உணவு தொழிலை கையில் எடுத்தனர். ஆனால் நாம் இங்கு காண இருப்பது உணவகம் பற்றில் அல்ல. அந்த உணவகத்தில் பயன்படுத்த கூடிய ஒரு பொருளை பற்றி தான். ஆம் உணவகத்தில் பயன்படும் முட்டை மூலம் எப்படி சமபாரிப்பது. அதிலும் குறிப்பாக முட்டை ஓட்டினை வைத்து எப்படி சம்பாரிப்பது என்பது குறித்து தான் காண இருக்கிறொம்.

முட்டை வைத்து விற்பனை செய்யலாம் ஏன் அதனை உடைத்து அதிலிருந்து உணவு பொருட்களாக கூட மாற்றி விற்பனை செய்யலாம். ஆனால் முட்டை ஓட்டினை எப்படி விற்பனை செய்வது என யோசிக்கீறிகளா? அது குறித்து மெல்ல பார்க்கலாம் (Egg shell buisness idea in Tamil). 

முட்டை என்றாலே நல்ல சத்து நிறைந்த ஒன்றாக உள்ளது. அதன் காரணமாக அதனை பலர் அன்றாடம் கூட சாப்பிட்டு வருகின்றனர். அப்படிபட்ட முட்டை மட்டும் அல்லாமல் அதனுடைய ஓடு கூட சத்து நிறைந்த ஒன்றாக உள்ளது. முட்டை உடைய ஓட்டினை (Egg shell buisness idea in Tamil) கால்சியம் மாத்திரைகள் தயாரிக்க பயன்படுத்துகின்ரனர். மேலும் முடிக்கு வலு சேர்க்க சாம்பூவாக பயன்படுத்துகின்றனர். இவை மட்டுமிண்றி பல்வேறு அழகு சாதன பொருட்களில் கூட பயன்படுத்துகின்றனர்.

முட்டை ஓட்டினை எங்கு வாங்குவது? 

முட்டை ஓடு வாங்குவதற்கு பெரிதாக சிரமம் அடைய தேவையே இல்லை எளிதாக கிடைக்க கூடிய ஒன்றாக தான் முட்டை ஓடு உள்ளது. உங்கள் ஊரில் உள்ள பேக்கரி ஷாப்களில் மூட்டை ஓடுகளை வாங்கி கொள்ளலாம். அங்கு தான் முட்டை பயன்பாடு அதிகமாக இருக்கும். அவர்கள் பயன்படுத்திய முட்டை உடைய ஓட்டினை அவர்களிடம் பெற்று கொள்ளலாம்.

மேலும் ஆன்லைனிலும் இதுபோன்ற முட்டை ஓடுகள் கிடைக்கின்றன.ஆன்லைனில் விற்பனையாகும் முட்டை ஓடுகளின் விலை டன் ஒன்றுக்கு ரூ.15,000 முதல் ரூ 22,000 வரை உள்ளது. எனவே உங்களுக்கு குறைவான விலையில் எங்கு கிடைக்குமொ அங்கு பெற்று கொள்ளலாம்.

எப்படி தயாரிப்பது: Egg shell buisness idea in Tamil

நீங்கள் வாங்கும் முட்டை ஓட்டினை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.அப்படி கொதிக்கும் போது அதன் மீது ஒரு படலம் தோன்றும் அதனை நீக்கி விட வேண்டும். இவ்வாறு கொதிக்க வைப்பதால் அதில் உள்ள கிருமிகள் நீங்கி விடும். பின் அதனை நன்றாக உலர வைக்க வேண்டும். வெயிலில் அல்லது உங்களிடம் ஒவன் இருந்தால் அவற்றில் கூட உலர வைக்கலாம்.

பின்னர் உலர வைத்த முட்டை ஓடுகளை நன்றாக பவுடர் ஆக்க வேண்டும். அதற்கு உங்களிடம் உள்ள மிக்சி அல்லது ஆன்லைனில் இதற்கான பிரத்யேக பொருட்கள் உள்ளன. அவற்றை கொண்டு இதனை செய்யலாம். இறுதியாக அனைத்தும் முடிந்த பிறகு அவற்றை பாட்டல் அல்லது சிப்லாக் கவர் அல்லது பேப்பர் பேக் மூலம் விற்பனை செய்யலாம்.

யாரிடம் விற்பனை செய்வது. (Egg shell buisness idea in Tamil)

நீங்கள் தயாரிக்கும் முட்டை பவுடரை தோட்டம் வைத்திருப்பவர்கள் அல்லது நர்சரி கார்டன் வைத்திருபவர்கள் அல்லது விவசாய செய்பவர்களிடம் விற்பனை செய்யலாம். பெரும்பாலும் மண்ணுக்கு உரமாக பயன்படுத்த கூடிய இடங்களில் விற்பனை செய்வது சிறந்தது ஆகும். இவ்வாறு செய்வது மூலம் குறைந்த செலவில் நிறைந்த லாபம் பார்க்கலாம். மேலும் இதற்காக பிரத்யேக பொருட்கள் வாங்க வேண்டிய தேவையில்லாததால் முதலீடு மிக குறைவான ஒன்றாகும் . முதலில் நீங்கள் வீட்டில் சிறிய அளவில் பயன்படுத்தி கூட பின்னர் பெரியளவில் விரிவு படுத்தலாம். 

Spread the love
x