பார்க்கும் போதே நாக்கு ஊரவைக்கும் முள்ளங்கி அல்வா…!! ஈசி ரெசிப்பி…!!

1 min read
halwa-vidiyar

தினசரி நாம் உண்ணும் உணவில் ஏதாவது ஒரு காய் வகையை கூட்டு, பொரியல், என பல முறைகளில் உண்கிறோம். ஆனால் பெரும்பாலான சிறுவர்களுக்கு காய் என்றாலே பிடிப்பதில்லை. அவர்களை சாப்பிட வைப்பதற்குள் பெற்றோர்களுக்கு போதும் போதும் என ஆகிவிடும். அப்போ அதே காய்யை sweet ஆ செஞ்சா…?

ஏப்போவும் போல முள்ளங்கியை வைத்து பொரியல், சாம்பார்னு செய்யாமல் புதுசா அல்வா செய்யலாம். வீட்டில் பெரியவர்கள்
முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்காள். முள்ளங்கி சாப்பிதுவதால் மலச்சிக்கல், இதயம் சம்பந்தமான நோய்கள், வெண்குஷ்டம், சுவாசக் கோளாறுகள், பூச்சி கடி, ஜுரம், மஞ்சள் காமாலை, சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் குறைக்க உதவும். சரி வாங்க முள்ளங்கியை வைத்து அல்வா எப்படி செய்யலாம் என பார்ப்போம்…

raddish-vidiyar

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி              – 1/4 கிலோ
சர்க்கரை               – 250 கிராம்
நெய்                        – 3 table spoon
பன்னீர் Esence     – 2 துளி
முந்திரி                   – 4
பாதாம்                   – 4

செய்முறை :

முதலில் 1/4 கிலோ இளசான முள்ளங்கியை நன்றாக கழுவி அதை துருவி கொள்ளுங்கள். ஒரு வாணலியில் 2 table spoon நெய்
சேர்த்து அதில் 4 முந்திரி 4 பாதாம் துருவி சேர்த்து வருத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு அதே
வாணலியில் துருவிய முள்ளங்கியை போட்டு நன்றாக வதக்கவும்.

வதக்கும் போது அதுவே தண்ணீர் விடும், அதிலேயே நன்றாக வேகவைக்கவும். முல்லங்கி நன்றாக வதங்கியவுடன் அதில்
250 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு அதில் வருத்த முந்திரி பாதாமை சேர்த்து, 2 துளி பன்னீர் Esence
சேர்த்து நன்றாக கிலரி அடுப்பில் இருந்து எடுத்து சூடாக பரிமாரவும். சுவையான முள்ளங்கி அல்வா ரெடி.

Spread the love
x