spicy indian foods: சுவையான சத்தான எள் துவையல் பத்தே நிமிடத்தில்…!!

1 min read
spicy indian foods-vidiyarseithigal.com

spicy indian foods

மதிய உணவிற்கு சுலபமாக டக்குனு ஏதாச்சும் செய்யனுமா..? அப்போ இந்த எள் துவையல் ரெசிப்பியை செய்து பாருங்கள். இது ருசியாக இருப்படோடு சத்தானதும் கூட. இதை சாதத்தில் மட்டும் இல்லாமல் இட்லி, தோசை போன்றவை உடனும் சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் ( spicy indian foods) :

எள்                                              – 1 கப்
நல்லெண்ணை                     – சிறிதளவு
நருக்கிய வெங்காயம்        – 1
புளி                                             – 20 gm
காய்ந்த மிளகாய்                  – 5
தேங்காய்த்துருவல்              – 1/5 கப்
நருக்கிய தக்காளி                 – 1
பெருங்காயத்துள்                  – சிறிதளவு
கறிவேப்பிலை                        – சிறிதளவு
கொத்தமல்லி தழை              – சிறிதளவு

செய்முறை:

ஒரு கடாய்யில் எள் சேர்த்து பொன்னிரமாக வறுக்கவும். பிறகு ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணை சூடானதும் அதில் வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல், தக்காளி, பெருங்காயத்துள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்: 

பிறகு அதில் வருத்த எள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதக்கியதும் மிக்ஸியில் இந்த கலவையை போட்டு துவயல் பதத்திற்கு அரைக்கவும். சுவையான எள் துவையல் ரெடி. இதை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் வேர லெவல் சுவையாக இருக்கும்.

Spread the love
x