வெளியானது திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் என்ன? தொகுப்பு..!
1 min readதமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. வாக்குபதிவுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன். இந்நிலையில் திமுக தனது 2021ம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பல முக்கிய அம்சங்கள் நிறைந்ததாக இந்த தேர்தல் அறிக்கை பார்க்கபடுகிறது.
திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும் -திமுக தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
கொரோனா நிவாரணத்தொகையாக ரூ.4000 வழங்கப்படும்
பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும்
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்
ஏழை மக்கள் பசிதீர முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும்
இந்து ஆலயங்கள் புனரமைப்பு பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புனரமைப்புக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்
கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10%, 80 வயதுக்கு மேல் 10% உயர்த்தி வழங்கப்படும்
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
தமிழ் எழுத்து வரி வடிவம் சிதைக்கப்படுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்
வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்
கூட்டுறவு வங்களில் 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கூட்டுறவுக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்