cinemanews: மீண்டும் கதாநாயகியாக களம் இறங்குகிறாரா வனிதா?

1 min read
cinemanews-vidiyarseithigal.com

cinemanews

நடிகை வனிதா விஜயகுமார் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . சில படங்களில் நடித்திருந்த இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமடைந்தார். அதன்பின் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். தொடர்ந்து பல விஷயங்களில் நடிகை வனிதா பரபரப்பாக பேசபட்டு வந்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழுக்க முழுக்க கதாநாயகிகாக கதையம்சம் கொண்டு உருவாக்கபட்ட படத்தில் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை பாம்பு சட்டை படத்தை இயக்கி ஆடம் தாசன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு முழு வீச்சில் தன்னை தயார் படுத்திகொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Spread the love
x