cholesterol reducing foods: கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள் என்னென்ன?

1 min read
cholesterol reducing foods-vidiyarseithigal.com

cholesterol reducing foods

உடலில் கொழுப்புச்சத்து சேராமல் இருப்பதற்குக் கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பது அர்த்தமல்ல. நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று இருவகை உண்டு.

அதில் நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் இயக்கமும் சீராக இருக்கும்.

இப்படி உடலில் கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும் சில உணவுகளை உங்களுக்காக பட்டியலிடுகிறோம். அதைத் தெரிந்து கொண்டு உங்களுடைய உணவுமுறையில் அதை பின்பற்றுங்கள்.

உருளைக்கிழங்கு

100 கிராம் உருளைக்கிழங்கில் கிட்டதட்ட 65 கலோரிகள் கிடைக்கின்றன. ஸ்டார்ச் நிறைந்த உணவுகளில் உருளைக்கிழங்கும் ஒன்றும்.

cholesterol reducing foods-vidiyarseithigal.com

cholesterol reducing foods

அதேசமயம் உருளைக்கிழங்கில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.

கடல்பாசி

பல வகையான தாவரங்கள் நம்முடைய உணவாகவும் மருந்தாகவும் நாம் பயன்படுத்துகிறோம். ரொட்டி, பாலாடைக் கட்டி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் அகர் அகர் எனும் பொருள் இந்த கடற்பாசியில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

கடல்பாசியில் உள்ள புரதச்சத்து உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் தன்மையும் கொண்டது. இவை எல்லாவற்றையும் விட, உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை கரைப்பதற்கு இந்த கடல்பாசி உதவுகிறது.

மிளகாய்

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லை. வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும் என்றாலும் கூட, இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது. பூண்டில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் அல்லியம் என்னும் பொருள் மிளகாயிலும் உள்ளது.

cholesterol reducing foods-vidiyarseithigal.com

cholesterol reducing foods

இஞ்சி

உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளால் உடல் பருமன் போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டி இருக்கிறது. இந்த கெட்ட கொழுப்பை கரைக்க முயன்றும் முடியாமல் அவதிப்படுறவங்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கையான முறையில் கெட்ட கொழுப்பை கரைக்க வீட்டில் உள்ள பொருள் தான் இஞ்சி.

cholesterol reducing foods-vidiyarseithigal.com

cholesterol reducing foods

இஞ்சியை தோல் சீவி சாறெடுத்து அதனுடன் சிறிது ஏலக்காயுடன் 150 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதை 50 மில்லி அளவுக்கு சுண்ட வைத்து குடித்து வர உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரையத் தொடங்கும்.

புளித்த உணவுகள்

புளித்த உணவு என்றாலே நமக்கு தயிர் நினைவுக்கு வரும். தயிர் வயிற்றுக்கு மிகவும் நல்லது தான். அதேபோன்று வெங்காயம், முட்டைகோஸ் போன்ற சில காய்கறிகளும் வினிகரில் ஊறவைக்கப்பட்டு புரோஃபயாடிக் உணவுகள் கிடைக்கின்றன. இந்த புளிக்க வைக்கப்பட்ட புரோ ஃபயோடிக் உணவுகள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்குவதைத்

தடுக்கிறது.

Spread the love
x