chia seeds benefits for weight loss Tamil..!

1 min read
chia seeds benefits for weight loss Tamil-vidiyarseithigal.com

chia seeds benefits for weight loss Tamil

உடல் எடை குறைப்பு என்பது அவ்வளவு எளிதானது அல்ல. எந்த உடல் எடை எளிதாக கூடுகிறதோ அதை விட கடினமானது உடல் எடையை குறைப்பது. பலர் உடல் எடை அதிகரிக்கும் போது அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். பின் உடல் எடையை குறைக்க கெமிக்கல் கலந்த பவுடர்கள், மாத்திரைகள் என பலதை உட்கொள்கின்றனர்.

அவ்வாறு செய்வது மிகவும் தவறான ஒன்றாகும். மாத்திரைகள் மூலம் உடல் எடையை குறைக்க நினைத்தால் எதிர் காலத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், எப்போதுமே இயற்கையான முறையில் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

உடற்பயிற்சி செய்வது, உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வது என பல இயற்கை வழிகளை கொண்டு உடல் எடையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். இயற்கையான முறையில் எடையை குறைக்க ஒரு தூண்டு கோளாக இருக்கும் ஒன்று தான் சியா விதைகள் (chia seeds )

What is chia Seeds ?

சால்வியா என்ற ஒரு வகை தாவரத்தில் இருந்து சியா விதைகள் உருவாகின்றன. மத்திய மற்றும் தெற்கு மெக்ஸிக்கோவை பூர்வீகமாக கொண்டுள்ளது. சியா விதைகள் உடலுக்கு மிகுந்த ஆற்றலை தருகின்றன. மேலும் இவை உடல் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன.

100 கிராம் சியா விதையில் 16.5 கிராம் புரதம், 34.4 கிராம் உணவு நார்ச்சத்து, 7.7 மில்லி கிராம் இரும்பு மற்றும் 335 மில்லி கிராம் மெக்னீசியம் உள்ளது. அவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன.

chia seeds benefits for weight loss Tamil-vidiyarseithigal.com

chia seeds benefits for weight loss Tamil

நாள்தோறும் ஒரு டீஸ்பூன் சியா விதை சாப்பிட்டால் போதும் அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு நல்ல ஆற்றலை தர கூடியதாக இந்த சியா விதைகள் உள்ளன.

பழங்காலத்தில் இந்த சிறிய விதைகள் ஆற்றல் ஊக்கியாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், போருக்குச் செல்லும் வீரர்களும், அதிக உடல் உழைப்பு கொண்டவர்களும் இதை உண்பார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.

Vitamins and mineral in chia seeds :

சியா விதைகளில் கலோரிகள் குறைவாக உள்ளன மற்றும் குளூட்டன் (Gluten) இல்லாதவை. பொதுவாக சியா விதைகளை சாலட் மற்றும் ஸ்மூதியில் சேர்த்து ஊட்டச்சத்து அடர்த்தியான உணவின் பலன்களை நாம் பெறலாம். சியா விதைகளில் 6 சதவீதம் தண்ணீர், 46 சதவீதம் கார்போஹைட்ரேட், 34 சதவீதம் கொழுப்பு, 19 சதவீதம் புரதம் உள்ளது. 28 கிராம் விதைகளில் 138 கலோரிகள் உள்ளன. 100 கிராம் சியா விதைகளில் 486 கலோரிகள், 16.5 கிராம் புரதம், 42.1 கிராம் கார்ப்ஸ், 30.7 கிராம் கொழுப்பு அடங்கியுள்ளன.

chia seeds benefits for weight loss Tamil-vidiyarseithigal.com

chia seeds benefits for weight loss Tamil

இதனை தவிர்த்து பொட்டாசியம், தையாமின், விட்டமின் பி12 போன்ற பல ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன. சியா விதையில் கேலோரிகள் மிகவும் குறைவு. அதே சமயத்தில் ஊட்டசத்துகள் நிறைந்ததாக உள்ளது.

benefits of drinking warm water tamil

Weight loss in chia seeds:

சியா விதைகள் தாவர அடிப்படையில் புரத சத்தின் மூலமாகும். உடலில் உள்ள தசைகளுக்கும், இரத்தத்தில் சக்கரை அளவை சமம் செய்யவும், உடலில் உள்ள கொழுப்பை எரிக்கவும் மிகுந்த சிறப்பானது ஆகும்.

இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை உண்பது உங்களுக்கு கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்தை வழங்கும். நார்ச்சத்துள்ள உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்பதால், பசி அதிகம் எடுக்காது.   உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

chia seeds benefits for weight loss Tamil-vidiyarseithigal.com

chia seeds benefits for weight loss Tamil

அதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் ஜீரண சக்தியை மேம்படுத்தவும் செய்கின்றன. இதனால் வேகமாக உடல் எடை குறைய வழிசெய்கிறது. அதிலும் குறிப்பாக தொப்பை கொழுப்பை சியா விதைகள் குறைக்கும் என்பதால் தொந்தியில்லா அழகான இடுப்பழகைப் பெறலாம்.

how to drink green tea for weight loss Tamil ?

How to use chia seeds:

சியா விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் முளை கட்டிய பின் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் பட்சத்தில் அதன் ஊட்டச்சத்து மேலும் அதிக்கரிக்கிறது.

இரண்டு ஸ்பூன் அளவு சியா விதைகளை எடுத்து போதிய அளவு தண்ணீர் அல்லது பால் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

காலையில் இது நன்றாக ஊறியிருக்கும் அதனுடன் தேவைப்பட்டால் பால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிடில் அதனுடன் பழங்களை நறுக்கி சேர்த்து புட்டிங் போல காலை உணவுக்கு பதிலாக எடுத்துக் கொள்வது நல்லது.

chia seeds benefits for weight loss Tamil-vidiyarsethigal.com

chia seeds benefits for weight loss Tamil

அப்படி எடுக்கும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும் நார்ச்சத்துக்களையும் அதிகமாகக் கொண்டது. சியா விதைகளை ஊறவைக்காமல்/முளைக்க விடாமல் சாப்பிட்டாலும் உடல் எடை குறையும்.

Conclusion:

உடல் எடை குறைப்பு என்பது ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும் உடற்பயிற்சி செய்வதும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த விதைகளை எடுத்துக்கொள்வது மட்டுமே உங்களுக்கு பெரிதாக உதவாது.

Spread the love
x