buddha statue for home vastu: லாபிங்க் புத்தா வயிற்றில் தடவினால் பணமழையா?

1 min read
buddha statue for home vastu-

buddha statue for home vastu

சீனாவில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புடாய் என்னும் சீன துறவியின் பிம்பமாக லாஃபிங் புத்தா பார்க்கப்படுகிறது. சிரித்துக் கொண்டே இருக்கும் இந்த புத்தர் சிலை நம்முடைய இந்தியாவில் குபேர சிலைக்கு இணையாக உருவ ஒற்றுமை இருப்பதால் அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் ஒரு வாஸ்து சிலையாக லாஃபிங் புத்தா மாறியது.

சீனா, இந்தியா மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் இருக்கும் எல்லா நாடுகளிலும் இந்த புத்தர் சிலை வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிர்ஷ்டம் தரும் ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. லாஃபிங் புத்தா இருக்கும் இடங்களில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கவே செய்யாது என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

எனவே இதன் விற்பனையும் படுஜோராக நடைபெறுகிறது. அந்த வகையில் லாஃபிங் புத்தர் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

புத்தர் என்று கூறப்படும் இந்த லாஃபிங் புத்தர் பொதுவாக தங்க நிறத்தில் இருக்கும் பல்வேறு உலோகங்களில் தயாரிக்கப்படும். இந்த புத்தர் சிலை வீட்டில் வாங்கி வைத்தால் அள்ள அள்ள குறையாத பணமும், செல்வமும் சேருமாம்.

buddha statue for home vastu-vidiyarseithigal.com

buddha statue for home vastu

 அதிரஷ்டம் வர சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு திசையில் வீட்டில் புத்தரை வைக்க வேண்டும். நீங்கள் எந்த அளவிற்கு பெரியதாக லாஃபிங் புத்தர் வாங்கி வைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு அதிர்ஷ்டமும் பெரியதாக இருக்குமாம்.

இந்த புத்தரின் வயிற்றை மெதுவாக தடவி விட்டால் குடும்பத்தில் இருக்கும் எல்லா துரதிருஷ்டங்களும் நீங்கி, அதிர்ஷ்டங்கள் பெருகுமாம். தினமும் காலையில் எழுந்ததும் இதன் முகத்தில் விழித்தால் அன்றைய நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்குமாம்.

Best 5 LIC plans For Five Years In Tamil..!

குடும்பத்தில் செல்வத்தை அதிகரிப்பது மட்டும் அல்லாமல், குடும்ப நபர்களுக்கு இடையே இருக்கும் மன கசப்புகளையும் அகற்றி, மன அழுத்தத்தை நீக்கி நம்முடைய ஞானத்தை பெருக செய்யும் இந்த புத்தர் சிலை பார்க்கும் பொழுதே மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுவதை நம்மால் உணர முடிகிறது.

இந்த சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டிற்கு உள்ளே வருமாறு பார்த்து அமைக்க வேண்டும். வெளியில் செல்லுமாறு அமைக்க கூடாது. வாசலை நோக்கி அமைக்கவே கூடாது.

மேலும் இந்த புத்தர் சிலை நம்மில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் ஒரு மூட்டையை வைத்திருக்கிறது பாருங்கள், இது நம்முடைய பாவ சுமைகளையும், துரதிருஷ்டங்களையும் அந்த மூட்டைக்குள் போட்டுக் கொள்ளுமாம்.

buddha statue for home vastu-vidiyarseithigal.com

buddha statue for home vastu

நமக்கு அதிர்ஷ்டங்களையும், புண்ணியங்களையும் வாரி வழங்குமாம். லாஃபிங் புத்தா அமைக்கப்பட்டு இருக்கும் இடம் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும் வெறும் தரையில் இதை அமைக்க கூடாது. மேலும் கண்பார்வைக்கு கீழே இருக்குமாறு அமைக்க கூடாது. குளியல் அறை, சமையல் அறை, கழிப்பறை போன்ற பகுதிகளில் இவற்றை கண்டிப்பாக வைப்பது துரதிருஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

Is peanut butter good for weight loss tamil

வராண்டா, அலுவலகம், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் பெரிய பெரிய வீடுகளின் வரவேற்பறைகளில் இதை பிரம்மாண்டமாக வைக்கப்படுவது அதிர்ஷ்டம் நிறைந்ததாக கருதப்படுகிறது.

மேலும் இதனை சுற்றி எந்த விதமான மின்னணு சாதனங்களும், மோட்டார் போன்ற எந்திரங்களும் அமைக்கப்பட்டு இருக்க கூடாது. இது இதிலிருந்து வரக்கூடிய நேர்மறை ஆற்றல்களை தடுக்கக்கூடிய செயலாக கருதப்படுகிறது.

தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் புத்தர் சிலையை அமைக்கலாம். மேலும் லாஃபிங் புத்தர் சிலையை சுற்றி வாசம் மிகுந்த ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை போட்டு வைப்பதால் அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும் பெருகும்.

Spread the love
x