bharathi kannamma 2: சினிமானு வந்தாலே அட்ஜஸ்ட்மெண்ட் தான்..! உண்மையை போட்டுடைத்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!
1 min readbharathi kannamma 2
சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, கதாநாயகிகளை மையமாக கொண்டு படங்கள் வந்து கொண்டிருந்தாலும், ஒரு புறம் சினிமாவில் பெண்களை அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கு அழைப்பது ஒரு எழுதப்படாத விதியாக உள்ளது. இதனை எதிர்த்து பல பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத். யூடியுப் மூலம் மக்களிடம் அறிமுகமான இவர், பாரதி கண்ணம்மா சீசன் 2 மூலம் பிரபலமானார். இந்நிலையில் இவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் தான் சந்திந்த அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த பிரச்சனைகளை கூறியுள்ளார்.
bharathi kannamma 2
அதில் அவர் கூறியதாவது, கேரக்டர் ரோல் உட்பட எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசிவிட்டு தான் கமிட் செய்கிறார்கள். நான் ஒரு ஆடிஷனுக்கு போன போது கூட என்னிடம் இது குறித்து முகத்திற்கு நேராக பேசினார்கள். ஆனால் நான் அதற்கு முடியாது என்று கூறிவிட்டேன். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் காதலானால் தொல்லை. உடலில் காயங்களுடன் பிரபல தமிழ் நடிகை..!
bharathi kannamma 2
மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் கிடைக்கும் என்ற நிலைமையும் இருந்தது. அதனால் நான் ஆடிஷனுக்கு செல்வதையே விட்டு விட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது கிடைக்கட்டும் என்று சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் அவர் அதன் மூலம் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.
பிரசவ வலி துடிப்பு முதல் கையில் குழந்தை பெறும் தருணம் வரை வீடியோவாக வெளியிட்ட நடிகை.. !
இவர் மட்டுமல்லாமல் எத்தனையோ நடிகைகள் இது போன்ற கசப்பான அனுபவங்களை சந்தித்திருக்கிறார்கள். அது குறித்து சிலர் வெளிப்படையாக கூறினாலும் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை வெளியிடுவது கிடையாது. ஒரு சில நடிகைகள் மட்டுமே இது போன்ற மனிதர்களின் முகத்திரையை கிழித்து வருகின்றனர்.