best unknown tourist places in kerala..! Must visit places கேரளா..!

1 min read
best unknown tourist places in kerala-vidiyarseithigal.com

best unknown tourist places in kerala

இந்தியாவில் சுற்றுலா தளங்களுக்கு குறைவே இல்லை. பெருவாரியான நகரங்களில் பல இடங்கள் சுற்றுலா செல்ல இடங்களாக உள்ளன. இருப்பினும் பெரும்பாலான மக்கள் கேரளாவிற்கு சுற்றுலா செல்வதை விருப்பமாக கொண்டுள்ளனர். அதற்கான காரணமாக இருப்பது அங்கு நிலவும் வானிலை மற்றும் பச்சை போர்வை உள்ள பகுதிகளே ஆகும் . கண்களை கொள்ளை அடிக்கும் அளவுக்கு இயற்கை எழில் நிறைந்த பகுதியாக கேரளா உள்ளது.

கேரளா என்றாலே அதிகபடியான மக்கள் செல்ல விரும்பும் இடங்கள் மூணார், தேக்கடி, ஆலப்பூழா ஆகும் . ஆனால் இந்த இடங்களை காட்டிலும் கேரளாவில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன . அவை என்னென்ன என்பதனை குறித்து இப்பதிவில் காணலாம் .

Silent National Park :

கேரளாவில் வனவிலங்கு பூங்காக்களுக்கு பஞ்சம் என்பதனே 237.25 சதுர அடி கிமீ கொண்டதாக  உள்ளது. பாலக்காட்டிற்கு வடகிழக்கு பகுதியில் இந்த சரணாலயத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூ வகைகளை இங்கு கண்டு ரசிக்க இயலும். வனவிலங்கு புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்ற இடமாக இவ்விடம் அமைந்துள்ளது. அருகாமையில் உள்ள ஏர்போர்ட்  கோயும்பத்தூர் ஆகும் . அருகாமையில் உள்ள இரயில் நிலையம் பாலக்காடு ஆகும் .

Kuruvadweep:

கேரளாவில் உள்ள ஏராளமான சுற்றுலா இடங்களில் இதுவும் ஒன்று . இதன் முக்கிய அம்சமாக இருப்பது இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் தான் அதில் உள்ள வனவிலங்குகளும் தான் . வேலை பளு நிறைந்த இன்றைய வாழ்க்கையில் இருந்து விடுப்பட்டு இயற்கை ரம்மியத்தில் அமைதியாக பொழுதை கழிக்க சிறந்த இடமாக அமைந்துள்ளது. இதனை குட்டி தீவு என்றே அழைக்கலாம். அருகாமையில் உள்ள ஏர்போர்ட் மற்றும் ரயில் நிலையம் கோழிக்கோடு ஆகும் .

Thenmala:

இயற்கை சுற்றுலாவிற்கு குடும்பத்துடன் செல்ல கூடிய முக்கிய இடமாக இது உள்ளது. இயற்கை சூழலுக்கு நடுவில் அமைந்துள்ள நதிகள், மான் பூங்கா, நீர்விழ்ச்சி என அனைத்தும் மக்களை கவரும் வகையில் உள்ளது. குழந்தைகளுக்கு என தனி பொழுதுபோக்கு இடங்கள் கட்டமைக்கபட்டுள்ளது. காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதாக ஒரு அட்வென்சூரஸ் பயணமாக thenmala இருக்கும் .

best unknown tourist places in keralabest unknown tourist places in kerala

Butterfly safari இங்கு காணக்கூடிய முக்கிய இடங்களில் ஒன்றாகும். Adventure விரும்பும் மக்களுக்காக rock climbing, mounting biking போன்ற சிறந்த விளையாட்டுகள் இங்கு உள்ளன. அடுத்தபடியாக மலை ஏறுதல் அனைவருக்கும் பிடித்த ஒன்று இங்கு முக்கிய அம்சமாகும் . அருகாமையில் உள்ள ஏர்போர்ட் திருவனந்தபுரம் ஆகும் . அருகாமையில் உள்ள ரயில் நிலையம் கொல்லம் ஆகும் .

Kerala Unknow tourism part 1 

Poovar :

கேரளாவில் உள்ள தலைசிறந்த இடங்களில் இதுவும் ஒண்று . திருவனந்தபுரத்திடில் இருந்து 27 கிமீ தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. பலராலும் அதிக அறியப்படாத இடமாக இந்த இடம் உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு பிடித்த இடமாகவும் உள்ளது. பறவைகளில் ஓசையும், நதியின் சத்தமும் இந்த இடத்தின் சிறப்பாகும். ஆயூர்வேதிக் மாசாஜ் மற்றும் ஸ்பா போன்ற இடங்கள் அதிகமாக உள்ளது. புத்துணர்ச்சி பெற சிற்ந்த இடமாக உள்ளது.

Poovar Beach அரேபியன் கடலுக்கும், நெய்யார் நதிக்கும் இடையில் அமைந்துள்ளது . இங்கு செல்ல வாட்டர் டாக்ஸி மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும் . Vizhijam இங்கிருந்து 12கிமீதொலைவில் அமைந்துள்ளது சர்வதேச கப்பல் போக்குவரத்துகான் இடம் அங்கு சென்று இயற்கையாக உருவான துறைமுகத்தை பார்ப்பது முக்கிய சுற்றுலா இடமாகும். அருகாமையில் உள்ள ஏர்போர்ட் மற்றும் ரயில் நிலையம் திருவனந்தபுரம் ஆகும்.

Spread the love
x