Best Tws headphones under 2000

1 min read
best tws headphones-vidiyarseithigal

best tws headphones

இன்றைய நவீன உலகில் ஹெட்செட் இல்லாமல் ஒருவரை கூட பார்க்க முடியாது. செல்போன் வைத்திருக்கும் அனைவரிடமும் ஹெட்செட் என்பது ஒன்று பிராதான ஒன்றாக மாறிவிட்டது. அப்படிபட்ட ஹெட்செட்டில் பல்வேறு வகைகள்  உண்டு . அவை wired headset, wireless headset ஆகும். Wireless headset யில் குறிப்பாக பல மாடல்கள் உண்டு . அவை தான் Boom headset மற்றும் Tws headset ஆகும் .

இந்த பதிவில் நாம் முழுக்க முழுக்க Tws headset பற்றி தான் காண இருக்கிறோம். டெக்னாலஜி வளர்ச்சியின் முக்கிய ஒன்றாக செல்போன் மாறின. அவற்றிக்கு உடன் வரும் Accessories க்கும் பலவித வளர்ச்சி வந்தன. அப்படியாக வந்ததுதான் Tws ( True wireless stereo) . காதுகளில் மிகவும் கச்சிதமாக இருக்கும் வகையில் இந்த ஹெட்செட்கள் வடிவமைக்கபட்டுள்ளன.

நம் அனைவருக்குமே ஒரு wireless ஹெட்செட் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் . அப்படிபட்டவர்களுக்காக பிரத்யேக பதிவுதான் இது. இதில் under 2000 சிறந்த ஹெட்செட்கள் எவை என்பதனை காணலாம்.

Redmi Earbuds S :

ரெட்மி நிறுவனம் எப்போதுமே மக்களை அசத்தும் வகையில் பல கருவிகளை உருவாக்கி வருகின்றது. அந்த வகையில் குறைந்த விலையில் மிகவும் நேர்த்தியாக உருவாக்கபட்டது தான் இந்த tws. மிகவும் அழகான முறையில் இது வடிவமைக்கபட்டுள்ளது.

அதிகபட்சமாக 12 மணி நேரம் வரை இயங்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் இதில் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற வசதிகளும் கொடுக்கபட்டுள்ளது. Ip x4 வாட்டர் ரெசிஸ்டண்ட் திறன் கொண்டதாக உள்ளது. இதன் விலை ரூ.1799 ஆக உள்ளது.

best tws headphones Boat Airdopes 201:

போட் நிறுவனம் பல விதமான ஒலி சார்ந்த பொருட்களை உருவாக்கி வருகிறது. பெரிய அளவிலான சவுண்ட் சிஸ்டம், பெரிய வித பார்ட்டி மியூசிக் சிஸ்டம் போன்றவை இந்த நிறுவனம் உருவாக்கி வருகின்றது. அப்படிபட்ட நிறுவனம் தயாரித்த பொருள் தான் Boat airdopes 201 பார்க்க மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் .

தனியாக மூன்று மணி நேரமும் , கேஸூடன் 60 மணி நேரமும் இயங்கும் திறன் கொண்ட வகையில் உருவாக்கபட்டுள்ளன. பட்டன் கண்ட்ரோல்ஸ் கொண்டு இவை உருவாக்கபட்டுள்ளது. இதிலும் Ip x4 வாட்டர் ரெசிஸ்டண்ட் திறன் கொண்டதாக உருவாக்கபட்டுள்ளது. இதன் விலை ரூ.1999 ஆக உள்ளது.

Realme Buds Q:

Realme இந்தியாவில் வளர்ந்த வரும் நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம் சார்பில் உருவாக்கபட்ட ஒன்று தான் realme buds Q . பலவிதமான Specifications கொண்டதாக இவை உள்ளது. டச் கண்ட்ரோல்ஸ் கொண்டதாக இவை உருவாக்கபட்டுள்ளது. 20 மணி நேரம் இயங்கும் திறன் கொண்டதாக இவை உருவாக்கபட்டுள்ளது.

இதன் எடை 3.6 கிராம் என்பதால மிகவும் எடை குறைவான ஒன்றாக உள்ளது. இதிலும் IPX4 உள்ளதாக வாட்டர் ரெசிஸ்டன்ட் திறன் கொண்டதாக உள்ளது. மேலும் இதில் ப்ளூடூட் 5.0 கொடுக்கபட்டுள்ளது Connectivity  திறன் அதிகமாக உள்ளது. இதன் விலை ரூ.1799

Oppo enco W11:

அனைத்து முன்னணி நிறுவனங்களுமே இந்த வகை ஹெட்செட்களில் தங்கள் பிரத்யேக திறமைகளை காட்டி வருகின்றன. அந்த வகையில் Oppo நிறுவனமும் enco w11 என்ற ஹெட்செட்டை களமிறக்கி உள்ளது. Ip 55 வாட்டர் ரெசிஸ்டண்ட் திறன் கொண்டதாக உள்ளது.புளூடூத் 5.0 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. டச் கண்ட்ரோல்ஸ் மூலம் இயங்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதன் விலை ரூ.1948 ஆக உள்ளது.

Spread the love
x