best places to visit in Pondicherry..! Must visit Places..!
1 min readbest places to visit in Pondicherry
இந்தியாவில் கோவாவிற்கு நிகரான ஒரு சுற்றுலா தலம் என்றால் அது Pondicherry ஆகும். இதனை மினி கோவா என்றும் சிலர் அழைப்பது உண்டு. வழிபாட்டு தலங்கள், கடற்கரைகள் என பல சிறப்புகளை பாண்டிச்சேரி பெற்றுள்ளது. இதனை புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்து தற்போது அழைத்து வருகின்றனர்.
பிரஞ்ச், தழிம், ஆங்கிலம் என அனைத்து கலாச்சாரங்களையும் ஒன்றடக்கியதாக Pondicherry உள்ளது. வங்காள விரிகுடா கடல் பரப்பை ஒட்டி உள்ளதால் மிக நீண்ட கடற்கரைகளை இங்கு காண முடிகிறது. மேலும் பிரெஞ்ச் ஆட்சியாளர்களின் கட்டிட கலைகளையும் இங்கு நம்மால் கான முடிகிறது.
குடும்பத்துடன் சுற்றுலா செல்ல உகந்த இடமாக Pondicherry இருந்து வருகிறது. மேலும் சிறப்பு வாய்ந்த மணக்குல வினாயகர் ஆலயம், rock beach Pondicherry யில் உள்ளது. இவை போக ஷாப்பிங் செல்வதற்கு சிறந்த இடமாகவும் இது உள்ளது.
places to visit in Pondicherry:
Paradise Beach:
கடற்கரைகளுக்கு பெயர் போன நகரங்களில் பாண்டிச்சேரியும் ஒன்றாகும். பலவிதமான கடற்கரைகள் இங்கு உள்ளது. அதில் ஒன்று தான் Paradise Beach ஆகும். கடலூர் செல்லும் அமைந்துள்ளது இந்த paradise Beach. சுண்ணாம்பாறு ஒட்டி அமைந்துள்ள இக்கடற்கரைக்கு படகின் மூலம் மட்டுமே செல்ல முடியும்.
Mangroove காடுகளின் வழியாக செல்ல முடியும் என்பதால், அங்கு செல்லும் போதே இயற்கையுடன் ஒட்டி விடலாம் என்றே கூறலாம். Paradise Beach மிகவும் துள்ளியமான கிரிஸ்டல் கிளியர் என்று சொல்லக்கூடிய தூயமையான தண்ணீரை கொண்டுள்ளது.
best places to visit in Pondicherry
தங்கத்தால் போர்வை போர்த்தியது போல மிக நீண்ட அழகான கடற்கரைகளை உடையது. பறவை விரும்பிகளுக்கு இந்த இடம் மிகவும் பிடித்தமான ஒன்றாகவே இருக்கும் என்று கூறலாம். மேலும் தண்ணீரில் செய்யக்கூடிய பல சாகசங்களை அங்கு செய்து பார்க்க இயலும்.
Aurobindo Ashram :
Pondicherry யின் முக்கிய அம்சங்களில் ஒன்று இந்த ஆரோபிந்தோ ஆஷ்ரம் ஆகும். Pondicherry க்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் செல்லக்கூடிய இடமாகவும் இது உள்ளது. 1926ம் ஆண்டு Aurobindo Ghose என்பவர் மூலம் இந்த ஆஷ்ரம் தொடங்கப்பட்டது. எளியமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது குறித்து எடுத்துரைப்பது இந்த ஆஷ்ரமத்தின் நோக்கமாகும்.
அழுத்தம் நிறைந்த வாழ்வியலில் இருந்து மீண்டு ஆத்மாவை சாந்தி அடைய நினைப்பவர்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடம் இதுவாகும். பண்முகத் தன்மை வாய்ந்த கலாச்சராங்கள் நிறைந்ததாக இந்த ஆஷ்ரம் உள்ளது.
sirumalai பற்றிய சுவாரசிய தகவல்கள்…! அறியப்படாத ஊட்டி..!
Auroville:
1968ம் ஆண்டு Mirra Alfassaa என்பவரால இந்த இடம் உருவாக்கப்பட்டது. இந்த இடத்தின் முக்கிய நோக்கமே உலகத்தில் அனைத்து சாதி, மதத்தவரும் அவரவர் மதம், சாதி அனைத்தையும் துறந்து ஒன்றாக வாழ வேண்டும் என்பதாகும்.
best places to visit in Pondicherry
அங்குள்ள மிகப்பெரிய தங்க நிறத்திலான உலக உருண்டை வடிவில் உள்ள இடத்திற்கு ‘Matrimandir’ என பெயர் ஆகும். உலகில் உள்ள 124 நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து இதனை உருவாக்கி உள்ளனர். ஒருவரின் தனிப்பட்ட ஆத்மா உணர விரும்புவர்கள் செல்லக்கூடிய இடமாக இது உள்ளது.
quick weight loss in tamil ஒரே மாதத்தில் 7 kG..! இந்த 4 விஷயம் செஞ்சா போதும்..!
Rock Beach :
இயற்கையான முறையில் பாறைகளால் உருவானதாக இந்த Rock பீச் கருதப்படுகிறது. வங்காள விரிகுடாவின் அழகை ரசிக்க ஏற்ற இடம் இதுதான் என்றே கூறலாம். 1.5 கிமீ நீளமுடைய இந்த கடற்கரை ஒரு பக்கம் கடலும் மறு பக்கம் போர் நினைவுச் சின்னங்கள், பூங்கா, உணவகம் என பல கொண்டுள்ளது.
best places to visit in Pondicherry
கடற்கரை சாலைகளில் வாகன போக்குவரத்து குறைவு என்பதால் இயறகையில் ஒரு அழகிய நடைபயணத்தை மேற்கொண்டு கடற்கரை அழகை ரசிக்கலாம்.
Chunnambar Boat House :
சுண்ணாம்பாறு கிராமம் பாண்டிச்சேரியில் இருந்த் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. புதுவைக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய இடமாக இது இருந்து வருகிறது. அங்குள்ள படகு இல்லத்தில் தங்கி பொழுதை கழிக்கலாம். மேலும் கடற்கரைக்கு பகுதிக்கு சென்று இயற்கை அழகை ரசிக்கலாம்.
அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் கடற்கரை ஒட்டிய பகுதியில் கேம்பிங் செய்யலாம். இவையன்றி water sports விளையாடி மகிழலாம்.