best online jobs: வீட்டிலிருந்த படி Part time-ல் 8 dollar வரை சம்பாரிக்க..!

1 min read
best online jobs-vidiyarseithigal.com

best online jobs

best online jobs

இன்றைய நவீன உலகில் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்த படி பகுதிநேரத்தில் சம்பாரிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்றால் போல பல நிறுவனங்கள் பகுதி நேர வேலைவாய்ப்புகள் வழங்கி வருகின்றன. பெரும்பாலான மக்கள் பகுதி நேர வேலை என்றால் நாம் அங்கு சென்று பணிபுரிய வேண்டும் என்றும் வேலை பளு அதிகமாக இருக்கும் என்றும் கருதி வருகின்றனர்.

ஆனால் பகுதி நேர வேலைவாய்ப்புகள் மிகவும் எளிமையானதாக உள்ளன. நாம் நினைக்கும் வேலைகளை பகுதி நேர வேலைவாய்ப்புகளில் தேர்ந்தெடுக்க முடியும் . ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் வேலைவாய்ப்பு நமக்கு நன்கு தெரிந்ததா என்பதனை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

Part time வகைகள்:

பல்வேறு வகையான பகுதி நேர வேலைவாய்ப்புகள் உள்ளன. Data entry, Editing, content writing போன்ற பல்வேறு பகுதி நேர வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த வகை வேலை வாய்ப்புகள் நாம் வீட்டிலிருந்தே பணியாற்ற எளிதான ஒன்றாக உள்ளது . மேலும் இந்த வகை வேலைவாய்ப்புகளில் நமக்கு வேலை சுமை குறைவாகவே இருக்கின்றன.

இதனை தாண்டி நாம் வெளியில் சென்று பணியாற்ற வேண்டுமென்று எண்ணினால் அதற்கான பகுதிநேர வேலைவாய்ப்புகளும் உள்ளன.

Best online jobs:

Content writing :

நாம் அனைவருமே எழுதுவதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் ஆனால் Technical writing என்பது மிகச் சொற்ப நபர்கள் மட்டுமே அறிந்து உள்ளனர். அவ்வாறு நன்கு technical writing தெரிந்தவர்களுக்கு இது போன்ற content writing வேலைகள் மிகவும் சுலபமானதாக இருக்கும்.

எனக்கு டெக்னிகலாக எழுத வராது ஆனால் நான் மிகவும் நன்றாக எழுதுவேன் என்று நீங்கள் நினைத்தால் நீங்களும் content writing செய்யலாம். ஆனால் நீங்கள் அதற்கான பகுதி நேர நிறுவனத்தை கண்டறிய வேண்டும். அப்போது உங்களுக்கு எளிதாக இருக்கும்.

பெரும்பாலான பகுதி நேர நிறுவனங்கள் ஆன்லைனில் தான் வேலை வழங்கி வருகின்றனர். அதில் ஒன்று தான் Fiverr தான் Fiverr நிறுவனம் இதில் நீங்கள் லாக் இன் செய்து உங்களை பற்றிய தகவல்களை பகிர்ந்து பதிவு செய்து கொண்டால் உங்களை தேடி பகுதி நேர வேலைவாய்ப்புகள் வரும். எளிதாக நாள்தோறும் 3 முதல் 8 டாலர் வரை சம்பாரிக்கலாம்.

Video Editing :

வீட்டிலிருந்த படியே பகுதி நேரத்தில் சம்பாரிக்க மற்றொரு எளிய வழி தான் Editing . வீடியோ மற்றும் போட்டோ editing தெரிந்தாலே போதும் எளிதாக சம்பாரிக்க முடியும். மேலும் நீங்கள் நன்றாக எடிட்ங்க் தெரிந்த நபராக இருந்தால் உங்கள் அருகில் இருக்கும் Studio அல்லது event management companies ஆகியவற்றை அணுகி எளிதாக வீட்டிலிருந்த படி நன்றாக சம்பாரிக்கலாம். மேலும் நாம் முன் கூட்டியே கூறியது போல Fiverr இணையதளத்தில் பதிவு செய்து நன்றாக சம்பாரிக்கலாம்.

Event management:

பலருக்கு இது ஒரு தொழில் என்று தான் தோன்றும் ஆனால் இதுவும் ஒரு பகுதி நேர வேலைவாய்ப்பு தான். இதில் நீங்கள் மற்றவர்களை நம்பி இருக்க வேண்டாம். நீங்களே இதற்கு முதலாளியாக இருந்து பகுதி நேரத்தில் பணிபுரியலாம்.

தற்போது நாம் இருக்கும் காலகட்டத்தில் அதிகமான நபர்கள் தங்கள் பிள்ளைகளின் பிறந்தநாட்களை கூட பெரிதாக நடத்த வேண்டும் என நினைக்கின்றனர். அவ்வாறு நினைக்கும் வாடிக்கையாளர்களை நீங்கள் கவர்ந்தாலே போதும் எளிதாக நீங்கள் பகுதி நேரத்தில் சம்பாத்தியம் ஈட்டலாம்.

நீங்கள் யாரையும் இந்த தொழிலில் நம்பி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை முழுக்க முழுக்க உங்கள் Creativity மற்றும் ideas பொறுத்தே நீங்கள் சம்பாரிக்க போகீறிர்கள். அதிகபடியான marketing இந்த பகுதி நேர வேலைவாய்ப்பில் உங்களை முன்னேற்றி கொண்டு செல்லும்.

Data Entry :

அடுத்தபடியாக நம் அனைவருக்கும் தெரிந்த பகுதி நேர வேலை தான் டேட்டா எண்டரி வேலைகள். பல ஐடி நிறுவனங்கள் இந்த வகை அகுதி நேர வேலைகளை நமக்கு அளித்து வருகின்றன. இதற்கு நாம் பல இணையதளங்கள் மூலம் இந்த வகை வேலைவாய்ப்புகளை எளிமையாக தேடலாம்.

பின் குறிப்பு: எந்தவொரு பகுதி நேர வேலைக்கு உங்களிடம் பணம் கேட்டால் கொடுக்காதீர்கள். ஏனென்றால் எந்தவொரு சிறந்த நிறுவனமும் பகுதி நேரம் அல்லது முழு நேர வேலைகளுக்கு உங்களிடம் பணம் கேட்கமாட்டார்கள்.

Spread the love
x