best foods to eat at night for weight loss

1 min read
best foods to eat at night for weight loss-vidiyarseithigal.com

best foods to eat at night for weight loss

உடல் பருமன் உண்டாவதற்கு அதிகப்படியான கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது, குறிப்பாக எண்ணெய் அதிகமுள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் மாவுப் பொருள்கள் அதிகமாக எடுத்துக் கொள்வது, உடல் உடற்பயிற்சி இன்மை, வாழ்க்கை முறை மாற்றங்கள், போதிய தூக்கமின்மை, ஒரே இடத்தில் நாள் முழுக்க உட்கார்ந்து வேலை பார்ப்பது போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படலாம்.

உடல் பருமன் பிரச்சினை

உடல் பருமன் பல்வேறு காரணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அடிப்படையான இரண்டு விஷயங்கள் என்னவென்றால், உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான்.

நாள் முழுக்க பெரிதாக உடல் அசைவுகள் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்தபடி உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களுக்கும் நைட் ஷிப்ட்டில் வேலை செய்பவர்களும் இந்த பிரச்சினையை அதிகமாக சந்திக்கிறார்கள்.

rti online: What is RTI in Tamil?

​இன்சுலின் ஹார்மோன் சுரப்பு

நம்முடைய உடல் சூரிய ஒளி இருக்கும்போது (பகல் நேரத்தில்) சில ஹார்மோன்களையும் சூரிய ஒளி இல்லாத போது (இரவு நேரங்களில்) சில ஹார்மோன்களையும் சுரக்காது. அதில் மிக முக்கியான ஒரு ஹார்மோன் தான் இன்சுலின் ஹார்மோன். இது பகல் நேரத்தில் சுரக்கக்கூடிய ஒரு ஹார்மோன். சூரியன் மறைந்தபிறகு, இந்த ஹார்மோன் சுரப்பு இருக்காது

best foods to eat at night for weight loss-vidiyarseithigal.com

best foods to eat at night for weight loss

இரவு உணவுக்கான நேரம்

இரவு நேரம் கண் விழித்து வேலை பார்க்க வேண்டியிருக்க நபர்கள் (நைட் ஷிப்ட்) அதிகமாக பசி எடுக்கும் என்பதால் நடு ராத்திரியி்ல கடினமான உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்.

குறிப்பாக எனக்கு தூங்காமல் இருப்பதால் அதிகமாக பசிக்கிறது என்று சொல்லி பரோட்டா, பிரியாணி, ப்ரைடு ரைஸ் போன்ற உணவுகளை இரவு நடு ராத்திரி நேரங்களில் எடுத்துக் கொள்கிறார்கள். அது மிக மிக தவறு. ஆனால் என்ன காரணமாக இருந்தாலும் இரவு நேரங்களில் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

fruits for diet: டயட்டில் சாப்பிட வேண்டிய பழங்கள்..!

​உணவு சுழற்சி எப்படி இருக்க வேண்டும் ?

ஒரு நாளின் எல்லா வேளை உணவுகளும் 12 மணி நேரத்திற்குள்ளாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதாவது காலையில் 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்குள்ளாகவோ அல்லது 7 மணி முதல் இரவு 7 மணிக்குள்ளாக இருக்க வேண்டும். இரவு 7 மணிக்கு மேல் எக்காரணத்தை கொண்டு சாப்பிடக் கூடாது.

​என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?

ஒருவேளை இரவு கண் வழித்து வேலை செய்யும்போது அல்லது மாலை சீக்கிரம் சாப்பிட்டதால் பசி எடுத்தாலோ லேசாக ஏதாவது சாப்பிடலாம். ஆனால் அதிலும் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.இரவு நேரங்களில் திட உணவுகளை சாப்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

best foods to eat at night for weight loss-vidiyarseithigal.com

best foods to eat at night for weight loss

இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவது, பரோட்டா மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

என்ன சாப்பிடலாம்?

இரவு கண் விழித்து வேலை பார்க்கும்போது ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் சூப் போன்ற திரவ உணவுகளாக எடுத்துக் கொள்வது நல்லது.டீ, காபியை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் டீ, காபி குடிக்க நேர்ந்தால் மிக குறைவாக அளவில் (அரை கப்) என்கிற வீதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை மிக குறைவாக இருக்க வேண்டியது அவசியம்.

best foods to eat at night for weight loss-vidiyarseithiigal.com

best foods to eat at night for weight loss

அதை தவிர, மிக எளிதாக ஜீரணமாகிற கொய்யாப்பழம், ஆப்பிள், மாதுளை போன்ற ஏதாவது பழங்கள் சாப்பிடலாம். ஆனால் பழங்களாக இருந்தாலும் அதை நன்றாக மென்று சுவைத்து மெதுவாக சாப்பிட வேண்டும். ஒரு ஆப்பிளை அரை மணி நேரம் வரை கூட சாப்பிடலாம்.

சிறுநீர் கழித்தல்

உடல் பருமன் உள்ளவர்களுக்கும் அதிகமாக திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளும்போதும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றலாம்.

எப்போது சிறுநீர் வந்தாலும் உடனே சென்று சிறுநீர் கழிப்பது தான் நல்லது. அதை அடக்கி வைப்பது, இந்த வேலையை முடித்துவிட்டு போகலாம் என்று நினைப்பது தவறு.

அது நாளடைவில் சிறுநீர்ப் பையில் அப்படி ஏற்படும் சிறுநீர் தேக்கத்தின் காரணமாக சிறுநீரகக் கற்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Spread the love
x