best electric scooter under 1 lakh in tamil: அட இந்த பட்ஜெட்ல சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதானா?

1 min read
best electric scooter under 1 lakh-vidiyarseithigal.com

best electric scooter under 1 lakh

விஞ்ஞான வளர்ச்சி என்பது தடுக்க முடியாத ஒன்றாக உள்ளது. சைக்கிளில் மெல்ல தொடங்கிய நம் வாகன வளர்ச்சி தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் வடிவில் வந்து நம் முன் நிற்கிறது. இதுபோன்ற எலக்ட்ரிக் வாகனங்கள் தேவை அதிகரிக்க மற்றொரு காரணியாக இருப்பது எரிபொருள் விலை ஏற்றம் என்றும் கூறலாம்.

இந்நிலையில் எலக்ட்ரிக் வாகன சந்தையில் பல வித வாகனங்கள் வந்துவிட்டன். பொதுவாக எலக்ட்ரிக் வாகனம் என்றாலே அதிக விலை என்ற கருத்து இருந்து வருகிறது. ஒரு வகையில் அந்த கருத்து உண்மை என்றாலும், மற்றொரு வகையில் பார்க்க போனால் அவ்வாறு இல்லை என்றே கூறலாம்.

குறைவான விலையில் நல்ல தரமான வாகனங்கள் சந்தையில் நாள்தோறும் அறிமுகமாகி கொண்டுதான் உள்ளன. ஆனால் பலருக்கு அவை குறித்து போதிய தகவல்கள் கிடைப்பதில்லை. அவ்வாறு உள்ள வாகனங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Hero Electric NYX:(best electric scooter under 1 lakh)

ஹீரோ நிறுவனம் இந்தியாவில் உள்ள இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் முக்கிய ஒன்றாகும். பல கோடி மக்கள் இந்த நிறுவனத்தின் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த ஹீரோ நிறுவன தயாரிப்பில் உருவானது தான் இந்த Hero Electric NYX ஆகும்.

இந்த வாகனம் முழுமையாக சார்ஜ் செய்த பின் 100 கிமீ வரைசெல்லக்கூடியது என தெரிவிக்கபட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் 2.688 kwh என்றும், முழு சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது.

best electric scooter under 1 lakh-vidiyarseithigal.com

best electric scooter under 1 lakh

இதன் அதிகப்பட்ச வேகம் 42 கீமி எனவும், முழு சார்ஜ் செய்ய 6.5 யூனிட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.73,590- ரூ.86,540 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

benefits of pudina in tamil: புதினாவில் உள்ள நன்மைகளா இவை?

Hero Electric Eddy(best electric scooter under 1 lakh)

ஹீரோவில் பல மாடல்களிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒன்றுதான் Hero Electric Eddy ஆகும். ஹீரோவில் தயாரான மிகவும் குறைந்த வேகம் செல்லக்கூடிய இ-ஸ்கூட்டர் இது என்றே சொல்லலாம். இதனிடைய அதிகபட்ச வேகம் 25 கிமீ ஆகும். அதன் காரணமாகவே இதனை ஓட்டுபவர்களுக்கு டிரைவிங்க் லைசன்ஸ் தேவைப்படுவதில்லை.

best electric scooter under 1 lakh-vidiyarseithigal.com

best electric scooter under 1 lakh

இந்த வண்டியில் பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை  Find My Bike, E-lock, Follow Me Headlight, And Reverse Mode ஆகும். இந்த வண்டியின் பேட்டரி கேபாசிட்டி 51.2V / 30 Ah எனவும், இதனை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 85கிமீ வரை செல்லலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இதனை ஒருமுறை முழு சார்ஜ் செய்ய 4 முதல் 5மணி நேரம் வரை தேவைப்படுகிறது. இதன் விலை ரூ.72,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Okinawa Ridge(best electric scooter under 1 lakh)

ஒகினோவா ஸ்கூட்டர் நீண்ட காலமாக இந்திய சந்தையில் இருந்து வருகின்றனர். பல தரப்பட்ட மாடல்கள் வந்துள்ள நிலையில் நாம் காண இருப்பது Okinawa Ridge ஆகும். இந்த ஸ்கூட்டரின் சிறந்த ரேஞ்சாக கூறப்படுவது 84 கிமீ ஆகும். இதனை ஒருமுறை முழு சார்ஜ் செய்ய  2 முதல் 3 மணி நேரம் ஆகிறது.

best electric scooter under 1 lakh-vidiyarseithigal.com

best electric scooter under 1 lakh

இதன் பேட்டரி கேபாசிடி 1.75Kwh ஆகும். இதனை முழு சார்ஜ் செய்ய 6.5யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த குறிப்பிட்ட மாடலில் பல சப்-வேரியண்ட்கள் உள்ளன. அதன் காரணமாகவே இதன் விலை ரூ.69,793 முதல் தொடங்கி ரூ.76,285 வரை செல்கிறது.

3 வருடம், 800 எபிசோட்கள் வந்தாச்சு…! இனிமே ரெஸ்ட் தான்…! பாக்கியலட்சுமி கோபி ஷாக் வீடியோ..!

Avon E Plus

பார்பதற்கு சைக்கிள் போன்று தோற்றம் அளித்தாலும் இது ஸ்கூட்டர் என்று கூறினால், பலர் நம்பமாட்டார்கள். மிகவும் குறைவான வகையில் வீட்டில் இருந்து அதிக தூரம் பயணிக்க மாட்டேன், குறைந்த தூரம் மட்டும் பயணிப்பேன் என்று கூறுபவர்களுக்கு சிறந்த ஸ்கூட்டராக இது உள்ளது.

best electric scooter under 1 lakh-vidiyarseithigal.com

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 50கிமீ வரை செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. இதனுடைய வேகமும் மிகவும் குறைவே என்று கூறலாம். இதன் அதிகபட்ச வேகம் 24கிமீ ஆகும். பேட்டரி கேபாசிட்டி  48 V/12 Ah ஆகும்.முழுமையாக சார்ச் செய்ய 4 முதல் 8 மணி நேரம் வரை ஆகிறது. சார்ஜ் செய்ய தேவைப்படும் மின்சாரத்தின் அளவு 6.5 யூனிட் ஆகும். அதாவது ஒரு கிமீ பயணம் செய்ய நாம் செலவிடும் பணம் ரூ.0.07 ஆக உள்ளது. இதன் விலை ரூ.25,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது போல 1 லட்சத்திற்கும் குறைவாக பல இ-ஸ்கூட்டர்கள் உள்ளன.அவற்றை குறித்து தொடர்ந்து வரவிருக்கும் தொகுப்புகளில் காணலாம்.

Spread the love
x