best electric 2 wheeler in india in tamil ..! Part 2..!
1 min readbest electric 2 wheeler in india
உலகில் காற்று மாசு அடைவதை குறைக்க கண்டுபிடிக்கபட்டது தான் இ- வாகனங்கள் . காற்று மாசு மட்டுமின்றி ஒலி மாசு மற்றும் எரிபொருளுக்கு மாற்று தீர்வாக கண்டுபிடிக்கபட்டது என்று கூட கூறலாம் . இப்படிபட்ட இ- வாகனங்கள் தொடக்கத்தில் குறைவாக விற்பனையாளும் இன்றைய நிலையில் குறிப்பாக பெட்ரோல் , டீசல் விற்கும் விலையில் சிறந்த வாகனங்களாக மாறியுள்ளன.
இ-வாகனங்களால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சுற்றுசூழல் பாதுகாப்பு என்பது இந்த வகை வாகனங்களால் சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த பதிவில் இந்த வாகனங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம் மற்றும் சிறந்த இ-வாகனங்கள் எவை என்பது குறித்தும் காணலாம் .
Cheaper to Run:
ஒரு இ- வாகனம் இயங்க பெட்ரோலை விட 40% குறைந்த அளவே நமக்கு செலவாகிறது. இதன் மூலம் நம் பணத்திற்கு சிறந்த சேமிப்பாக அமைக்கிறது. மேலும் நீங்கள் மின்சாரம் மூலம் சார்ஜினை செய்யாமல் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்தால் இன்னும் நமக்கு செலவு குறைவாகவே ஏற்படுகிறது.
Environment support :
ஒரு இ-வாகனம் இயங்குவதால் பெருமளவிலான காற்று மாசு குறைகிறது. எரிபொருள் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையினால் ஏற்படும் பாதிப்புகள் இ-வாகன இயக்கத்தால் குறைகிறது. மேலும் நாம் சோலார் மூலம் மின்சாரத்தை இந்த வாகனத்திற்கு கொடுத்தால் நாம் மின்சாரத்திற்காக தனியாக ஒரு எனர்சி உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
Cheap maintenance :
பிற வாகனங்களை காட்டிலும் இந்த வாகனங்கள் குறைவான மெய்டனன்ஸ் செய்தால் போதும். அதன் மூலம் நமக்கு அன்றாட மெய்டனன்ஸ் செலவுகள் குறைகிறது.
தற்போது இந்தியாவில் சிறந்த இ- வாகனம் எவை என்பது குறித்து பார்க்கலாம்.
best electric 2 wheeler in india
Revolt RV 400:
பெரும்பாலும் இ வாகனம் என்றாலே ஸ்கூட்டர் போன்று தான் இருக்கும் . அவ்வாறு தான் பல நிறுவனங்கள் தயாரித்து வந்தன. ஆனால் இ வாகனத்திலும் கீயர் வண்டி போல தயாரித்த நிறுவனம் ரீவால்ட் நிறுவனம் . ரீவால்ட் RV 400 வாகனம் 3.2 kwh பேட்டரி திறன் கொண்டதாக உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 85 கிமீ என கூறப்பட்டுள்ளது.
மேலும் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதில் மூன்று விதமான டிரைவிங்க் மோட்கள் உள்ளன Eco, Sports, Normal என மூன்று மோட்கள் உள்ளன. இதில் உள்ள சில முக்கிய அம்சங்கள் என்னவென்று பார்த்தால் navigation, geo fencing, bike diagonistics etc போன்ற பல முக்கிய அம்சங்கள் உள்ளன. இதன் விலை 1.07 லட்சமாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
Okinawa ipraise+:
இந்த வண்டியின் பேட்டரி திறன் 3.3 kWh ஆக உள்ளது. அதிகபட்சமாக 58 கிமீ வரை வேகம் செல்ல கூடிய வண்டியாக இது உள்ளது. மேலும் இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 139 கிமீ வரை செல்ல முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரியை நாம் கழற்றி கூட எடுத்து சார்ஜ் செய்ய முடியும் . பேட்டரி முழு அளவை எட்ட 4 முதல் 5 மணி நேரம் ஆகும் .
இந்த வண்டியின் முக்கிய அம்சங்களாக இருப்பவை digital instrument cluster, இரண்டு பக்க டிஸ்க் பிரேக், geo fencing, battery info, secure parking போன்ற பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
Ather 450x:
இ-வாகன சந்தையில் தற்போது சிறந்த விற்பனையாகும் வாகனமாக இருப்பது இது தான். 2.9 Kwh பேட்டரி கொண்டதாக உள்ள இந்த வாகனம் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 80கிமீ ஆக உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 116 கிமீ வரை செல்லும் என கூறபட்டுள்ளது. மேலும் இதனை முழுவதும் சார்ஜ் செய்ய 5 மணி நேர ஆகும் . இதில் உள்ள சிறப்பம்சங்கள் Bluetooth, geo fencing போன்ற சிறந்த அம்சங்கள் உள்ளன.