best android games Tamil..! Unlimited Gameplay..!
1 min readbest android games
நம் அனைவருக்குமே மொபைலில் கேம் விளையாடுவது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். Action கேம்களை தாண்டி பலருக்கு Construction and Development கேம்கள் மிகவும் பிடித்தமான மற்றும் விளையாட துண்டக்கூடிய கேம்களாக உள்ளன.
இதுபோன்ற கேம்கள் பல Level கொண்டதாக உள்ளன. மேலும் முடிவில்லாத ஒரு விளையாட்டு அனுபவத்தை போட்டியாளர்களுக்கு அளிக்கின்றன. இது போன்ற கேம்கள் என்னவெல்லாம் உள்ளன என்பதை காணலாம்.
Gardenscapes:
பலருக்கு இந்த கேம் பற்றி தெர்ந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் மிகவும் அருமையான மிக நீண்ட கேம்களில் ஒன்று . ஆக்ஷன் கேம்களை விரும்பாத நபர்களுக்கு இது போன்ற கேம்கள் மிகவும் நன்றாக இருக்கும்.
முழுக்க முழுக்க ஆப்லைனில் விளையாட கூடிய கேம்களில் இதுவும் ஒன்று. வீட்டிற்கு வெளியே உள்ள தோட்த்தை முழுவதுமாக சரிசெய்து அனைத்து Level களையும் கடந்து செல்வதே இந்த கேமின் சிறப்பமாகும்.
மில்லியன் கணக்கில் டவுன்லோட் பெற்று சிறந்த கேமாக உள்ளது. Smooth Gameplay மற்றும் Eligant Graphics என இந்த கேம் விளையாடுபவர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
Homescapes:
மேலே நாம் பார்த்த Gardenscapes தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கபட்ட கேம் தான் இந்த Homescapes அதனை போன்று மிக நீண்ட gameplay இதிலும் உள்ளது. எண்ணற்ற Levelகளை இந்த கேம் கொண்டுள்ளது. விளையாடும் நபருக்கு சிறந்த அனுபவத்தை தரும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த கேமும் ஆப்லைனில் விளையாட ஏற்றவாறு டிசைன் செய்யபட்டுள்ளது. இந்த கேமில் ஒருவரது வீட்டை முற்றிலும் சரிசெய்து முடிப்பதே கேமின் முக்கிய அம்சமாகும் . சிறந்த gameplay அனுபவமும் நல்ல Graphics அனுபவமும் Player க்கு நல்ல அனுபவத்தை தருகிறது.
Township:
அடுத்ததாக இந்த வரிசையில் நாம் காணக்கூடிய கேம் டவுன்ஷிப் . அப்படி என்ன கேம் இது என்று பார்த்த புதுதாக ஒரு Town-ஐ நீங்கள் கட்டமைக்க வேண்டும் . அதுவே இந்த கேமின் முக்கிய அம்சமாகும். புதிதாக நீங்கள் பயிர்களை விளைவித்து அதனை கொண்டு ஏற்றுமதி, இறக்குமதி என செய்ய வேண்டும்.
ஒரு டவுனில் இருப்பது போல மருத்துவமனை, திரையரங்கம் என அனைத்தையும் நீங்கள் உருவாக்க வேண்டும். இவ்வாறாக ஒரு ஒரு லேவலையும் நீங்கள் முடித்து உங்கள் டவுனுக்கு தேவையான அனைத்து துறைகளையும், வீடுகளையும் நீங்கள் பெறலாம்.
Graphics and Smooth running என இந்த கேமினை சற்றும் தடையில்லாமல் விளையாட உதவியாக உள்ளது. பலருடைய Favourite ஆக இந்த இன்றளவும் இருந்து வருகிறது. ஒரு முறை தொடங்கினால் முடிக்க முடியாத அளவுக்கு கடினமான , சவால் விடும் கேமாக உள்ளது.
மேலும் இந்த வகை கேம்கள் விளையாடுபவரின் Creativity திறனை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் பல கேம்களுக்கு கிளிக் செய்யவும்
Wildscapes:
முன்னதாக நாம் பார்த்த Gardenscapes and Homescapes போன்ற அதே வகையான கேம்பிலேவை கொண்டதுதான் இந்த கேமும். ஆனால் இதில் என்ன மாற்றம் என்றால் நீங்கள் புதிதாக ஒரு zoo வை சரிசெய்து அதில் விலங்குகளை பராமரிக்க வேண்டும்.
கடினமான ஒவ்வொரு லெவலையும் முடித்து நீங்கள் அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் . அப்போது தான் எளிதாக இந்த கேமினை முடிக்க முடியும். இந்த கேமும் முழுவதுமாக ஆப்லைனில் விளையாட கூடிய கேமாக உள்ளது.
எளிமையான கேம்பிளே மற்றும் smooth graphics ஆகியவை இந்த கேமினை நன்றாக செயல்பட வைக்கிறது. விளையாடும் நபருக்கு சலிக்காத வகையில் தொடக்கம் முதல் இறுதி வரை Intresting level கள் அமைக்கபட்டுள்ளது.
Simcity:
இந்த கேமும் construction variety கேமாக உருவாக்கபட்டுள்ளது. Electronic arts நிறுவனம் இந்த கேமினை உருவாக்கி உள்ளது. மேலும் இந்த கேமும் டவுன்ஷிப் போன்று இருந்தாலும் முழுக்க முழுக்க வேறு வகையான கேம்பிளேவை இது கொண்டுள்ளது.
டவுன்ஷிப்பில் ஒரு விதமான Village வடிவிலான கேம்பிளேவை காணமுடியும் ஆனால் இங்கு முழுக்க முழுக்க City type கேம்பிளேவை கொண்டு வந்துள்ளனர். Construction type கேம்களில் விளையாடுபவர்களின் Creativity யை அதிகரிக்க இந்த இரண்டு கேம்களும் உள்ளன.
Truck Simulator:
நீங்கள் அதிகம் வாகனம் ஒட்டுவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் இந்த வகை கேம்கள் அதிகம் விரும்புவராக இருப்பீர்கள். முழுவதிலுமாக வாகனம் ஒட்டுவதை கேமாக வடிவமைத்துள்ளனர்.
உங்களுக்காக ஒரு Truck company யை உருவாக்கி அதன் மூலம் நீங்கள் இந்த கேமை தொடங்க வேண்டும். நீங்கள் செய்யும் டெலிவரி மூலம் உங்கள் எண்ணிக்கை இந்த கேமில் அதிகரிக்கபட்டு வரும்.
best android games
இறுதியாக truck அனைத்தையும் வாங்கி விட்டால் இந்த கேம் முற்று பெறும் இருப்பினும் நீங்கள் விளையாடி கொண்டே இருக்கலாம். சற்றும் சலிக்காத கேம்பிளேவே , truck விதங்கள் என கேம் ஆச்சரியமூட்டும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.