benefits sesame oil:நல்லெண்னையில் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சுகோங்க..!
1 min readbenefits sesame oil
உலகம் நவீன மயம் அடைந்து வந்தாலும் மக்கள் பலர் கொரோனா என்ற பெரிய தொற்றுக்கு பிறகு ஆரோக்கியமான வாழ்கைக்கு அடி எடுத்து வைக்க துவங்கி உள்ளனர். இயற்கையான உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். நாம் எடுத்துக் கொள்ளும் பழம் ,காய்கறிகள் மட்டும் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாக இருந்தால் போதாது. நாம் பயன்படுத்தும், சீரகம், கடுகு என அனைத்தும் செயற்கையை தவிர்த்து இயற்கையான ஒன்றாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் கூட மிகுந்த இயற்கையான ஒன்றாக இருக்க வேண்டும். சமையலுக்கு பல வகையான எண்ணெய்கள் பயன்படுத்துகிறோம் . அதில் ஒன்று தான் நல்லெண்ணைய் ஆகும் . நாம் அன்றாட பயன்படுத்தும் நல்லெண்ணையில் நமக்கு தெரியாத பல நன்மைகள் உள்ளன. அவை என்ன என்று பார்க்கலாம்.
எள்ளில் இருந்து நெய் , எண்ணெய் எனப்படும் நல்லெண்ணைய் எல்லா எண்ணெய்களை விட சிறந்த ஒன்றாக உள்ளது. இந்த எண்ணெயில் கணக்கற்ற ஊட்டசத்துக்கள் அடங்கி உள்ளன. எள் விதைகளை பயன்படுத்தி தயாரிக்கபடும் எள் எண்ணெய் மற்ற எண்ணெய்களை விட சுவையானதாக இருக்கும் . அதன் காரணமாகவே இன்னும் சிலர் இதனை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.
தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்களுக்கு எள் எண்ணெய் சிறந்த தீர்வாகும். இந்த எண்ணெய்யை நெற்றியில் மசாஜ் செய்தாற் போல தேய்த்து கொண்டால் தூக்கமின்மை குறைந்து நல்ல தூக்கம் வரும். மேலும் உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும் .
benefits sesame oil
குளிர்காலத்தில் எள் எண்ணெய் சிறந்த ஒன்றாகும் . குளிர் காலத்தில் ஏற்படும் இருமல் , தும்பல் , தசைவலி, சளி உள்ளிட்டவற்றை போக்க சிறந்த ஒன்றாக எள் எண்ணெய் உள்ளது. இதில் மசாஜ் செய்வது மூலம் உடலை சூடாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் . மற்ற எண்ணெய்களை காட்டிலு எள் எண்ணெயில் அதிக அளவில் நார்ச்சத்து காணப்படுகிறது . அதன் காரணமாக செரிமான தொல்லை குறைகிறது.
உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும ஆரோக்கியம் தரக்கூடிய ஒன்றாக எள் எண்ணெய் உள்ளது. புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை காக்க எள் எண்ணெய் உதவுவதாக சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இதில் உள்ள வைட்டமின் ஈ சரும் செல்களை பொலிவாக வைக்க உதவுகின்றன.