benefits of drinking warm water tamil

1 min read
benefits of drinking warm water tamil-vidiyarseithigal.com

benefits of drinking warm water tamil

benefits of drinking warm water tamil:

தண்ணீர் என்பது மனிதனுக்கு சரி இயற்கை உயிரினங்கள், தாவரங்களுக்கும் சரி மிக முக்கியமான ஒன்றாகும். அப்படிபட்ட தண்ணீரில் பல நன்மைகள் உள்ளன. நாம் வெறும் தண்ணீர் தானே என்று நினைக்கிறோம். ஆனால் தண்ணீரில் பல தாதுக்கள் உள்ளன.

அந்த தாதுக்கள் உடலுக்கு மிகுந்த நன்மைகளை தருகின்றன. அதிலும் முக்கியமாக நாள்தோறும் தண்ணீர் குடிப்பதை காட்டிலும் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.

Why have to drink water in Empty stomach?

காலையில் எழுந்த உடன் தண்ணீர் குடிப்பது பல நன்மைகள் பயக்கின்றன. நம் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு தண்ணீர் என்பது அவசியமானது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி வழங்குவது ஆகும்.

Best 5 LIC plans For Five Years In Tamil..!

காலையில் எழுந்தவுடன் வெந்நீரை குடிப்பது சாதாரணமான தண்ணீரை குடிப்பதை காட்டிலும் மிகவும் நல்லது ஆகும். வெறும் வயிற்றில் வெந்நீரை குடிப்பதால் சருமப் பிரச்சனைகள் முதல் செரிமான பிரச்சனைகள் வரை அனைத்திற்கு தீர்வாக உள்ளது. நாள்தோறும் வெந்நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

benefits of drinking warm water tamil:

Drinking hot water helps in skin care:

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடிப்பது உடலுக்கு பல வித நன்மைகளை அளிப்பதாக ஆயுர்வேதம் மற்றும் சீன மருத்துவ முறைகள் கூறுகின்றன. இதனால் செரிமான பிரச்சினைகள் முதல் முகப்பரு போன்ற பிரச்சனைகள் வரை களைய முடியும். நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

benefits of drinking warm water tamil-vidiyarseithigal.com
benefits of drinking warm water tamil

தினசரி உங்களுடைய நாளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீருடன் தொடங்கி ஆரம்பியுங்கள். இதனால் உங்களுடைய சருமம் மினுமினுப்பாகவும், பொலிவுடனும் காணப்படும். குமட்டல், அசெளரியம் போன்ற பிரச்சனைகள் உங்களை எட்டியே பார்க்காது. குறிப்பாக, டீ காபி போன்ற அனைத்து பானங்களையும் தவிர்த்து அதற்கு பதிலாக ஒரு வாரம் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் மட்டுமே குடிப்பதாக உறுதி எடுத்துக் கொண்டு ஆரம்பியுங்கள். இதனால் உங்கள் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை எளிதாக உணர்ந்து, அதை மீண்டும் தொடர ஆரம்பித்து விடுவீர்கள்.

Digestive problem solutions:

சித்தர்கள் நீர் சுருக்கி என்று சொல்லி யிருக்கிறார்கள் அதாவது நீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்பது இதன் பொருள். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும் ஒரு தம்ளர் வெந்நீர் குடிப்பதால் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆகும். செரிமானம் சீராக இருந்தால் தான் அடுத்த வேளை பசி எடுக்கும். இந்த ஜீரண உறுப்புகளை தூண்டுவதில் வெந்நீர் மிக முக்கிய பங்குவகிக்கிறது. இவை நம் இரைப்பையில் இருக்கும் பெப்ஸின் மற்றும் ரெனின் என்னும் பழைய என்சைம்களை வெளியேற்றி புது அமிலங்களை உண்டாக்குகிறது.

Benefits of Drinking warm water-vidiyarseithigal.com

Benefits of Drinking warm water

இவை செரிமான பிரச்சனையால் உண்டாகும் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம்.,உணவு எதுகளிப்பு போன்ற பிரச்சனைகளை வரவிடாமல் செய்யும். விருந்து உணவு அல்லது அசைவ உணவு சாப்பிடும் போது உடன் ஒரு தம்ளர் வெந்நீர் எடுத்துகொள்வது உணவின் செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. செரிமான கோளாறு இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் வரை வெந்நீர் எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Removing waste from body:

எந்த பொருளையும் சூடாக எடுக்கும் போது வியர்வை வெளிப்படும் என்பது இயல்பு. அதே போன்று மிதமான சூட்டில் வெந்நீர் குடிக்கும் போது நம் உடல் வியர்வைக்குள்ளாகும். சூடான பொருள் உடல் வெப்பநிலையை அதிகரித்து அதை சமன்படுத்தவே வியர்வையை வெளியேற்றுகிறது. வெந்நீர் குடித்த உடன் வெளியேறும் வியர்வையில் தேவையற்ற நீர், உப்பும் சேர்ந்து வெளியேறுவதால் உடலில் இருக்கும் நச்சுகளும் அகற்றப்படுகிறது.

ஆரோக்கியம் தாண்டி சருமத்துக்கு புத்துயிர் தருகிறது. உடலில் இரத்தக்குழாய்களை விரிவுப் படுத்துவதால் உடலுக்கு இரத்த ஓட்டம் தடையின்றி செயல்படுகிறது. இதனால் உறுப்புகளுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் சீராக கிடைக்கும். இதனால் பெருமளவு நோய்கள் உண்டாவது தவிர்க் கப்படுகிறது.

how to drink green tea for weight loss Tamil ?

மலச்சிக்கல் :

உடல் ஆரோக்கியத்துக்கு உணவு எவ்வளவு முக்கியம் அவ்வளவு முக்கியம் உணவிலிருந்து தனியாக பிரித்தெடுக்கும் சக்கையை வெளியெற்றுவது. இவை குடலிலிருந்து மலக்குடலுக்கு அனுப்பப்பட்டு வெளியேற்றப்படுவதும் அவசியம்.மலச்சிக்கல் பிரச்சனையால் அதிகம் பேர் அவதிப்படுகிறார்கள். தினமும் காலை எழுந்ததும் இரண்டு தம்ளர் வெந்நீர் குடித்துவந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நிரந்தரமாக விட்டொழியும்.

வெந்நீர் வயிற்றை சுத்தம் செய்து கழிவுகளை மலக்குடலுக்கு அனுப்பும். மலக்குடல் மலத்தை இளக்கி சிக்கலில்லாமல் வெளியேற்ற உதவும். அதனால் தான் மருத்துவர்கள் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களை அதிக அளவு தண்ணீர் குடிக்கவும் வலியுறுத்துகிறார்கள்.

How many times have to drink warm water daily?

தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் வெந்நீர் குடிப்பது நாள் முழுக்க உங்களை ஆற்றலோடு சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

உணவுக்கு முன் அரை மணி நேரத்தில் ஒரு தம்ளர் நீர், உணவுக்கு பின் ஒரு தம்ளர் நீர் போதும் உங்களை கச்சிதமாக வைத்திருக்கும்.

Benefits of Drinking warm water-vidiyarseithigal.com

Benefits of Drinking warm water

எப்போதும் வெந்நீர் என்னும் பழக்கம் வைத்திருந்தால் சருமத்தில் உண்டாகும் குறைபாட்டை விரைவில் சீர் செய்ய உதவும்.இவை தவிர சளி, இருமல், தொண்டைபுண் பிரச்சனைகளை மழைகாலங்களிலும் உண்டாக்காது.

வெந்நீர் கடையில் வாங்கும் பொருளோ நேரம் எடுத்து தயாரிக்க வேண்டிய பொருளோ அல்ல என்பதால் இனி உங்கள் வீட்டில் அனைவரும் வெந்நீருக்கு மாறுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் பிறகு நீங்களே குளிர்ந்த நீரா வேண்டாம் வெந்நீர் போதும் என்று சொல்வீர்கள்.

Spread the love
x