benefits of coffee in tamil: காபி குடிக்கிறத இவ்வளவு நன்மைகளா? நீங்களே பாருங்க..!
1 min readbenefits of coffee in tamil
காலை எழுந்தவுடன் முதலில் பல் துலைக்கி விட்டு என்ன செய்கிறோமோ..ஏது செய்கிறோமோ முதலில் நாம் செய்யும் விசயம் காபி குடிப்பதாக தான் இருக்கும். பலருக்கு காலை காபி என்பது ஒரு எனர்ஜி டிரிங்க் போல செயல்படுகிறது. சிலர் காபியுடன் பொழுதை ஆரம்பிக்கவில்லை என்றால் அன்றைய பொழுதே வீணாகிவிட்டதாக கூட கருதுகின்றனர்.
சிலர் டீ விரும்பி குடிப்பர் அதைப்போல சிலர் காபி விரும்பி குடிப்பர் . அப்படி காபியில் என்ன தான் இருக்கும் என்ற கேள்வி அவர்கள் காபி குடிப்பதை பார்த்தால் நமக்குள் தோன்றிவிடும் . அந்த அளவுக்கு அதிகமாக காபி குடிப்பர். அதாவது அக்டோபர் ஒன்று உலக காபி தினமாக கொண்டாடப்படுகிறது. உலகில் காபி பிரியர்களுக்கு இந்த நாள் ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகும் இருக்கும்.
முதன் முதலில் இந்த காபியை கண்டுபிடித்தவர் யார் என்று பார்த்தால் மொரோக்கோவை சேர்ந்த சூஃபி அறிஞர் நூருதின் அபு அல்கசன் என்பவர் ஆவார். இந்தியாவில் முதன் முதலில் காபி பயிரிடபட்ட இடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரில் தான். இத்தகைய வரலாறு உடைய காபியில் அப்படி என்னதான் இருக்கும் என்று பின்வருமாறு பார்க்கலாம்.
மருத்துவ குணம்
நிறைந்த ஒன்றாக காபி பார்க்கபடுகிறது. அட காபியில் என்ன மருத்துவ குணம் இருக்கும் என யோசிக்கிறீர்களா? ஆம் காபியிலும் குணம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன . அது என்ன என்று பார்த்தால் தற்கால உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பால் இறக்கின்றனர். ஆனால் அடிக்கடி காபி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது மிக குறைவு என ஆய்வு ஒன்று கூறுகிறது.
மேலும் இதயம் மட்டுமின்றி கல்லீரலுக்கும் காபி சிறந்த பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தபட்ட ஆய்வு ஒன்றில் காபி குடிப்பவர்களுக்கு திசுக்கள் இறுதியாகி ஏற்படும் நோயான ஸ்கலரோசிஸ் பாதிப்பு குறைவு என கூறப்படுகிறது.
benefits of coffee in tamil
புத்துணர்ச்சி :
வேலை பளூ அதிகம் உள்ளவர்கள் காபி குடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி அடைவதாக தெரிவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் புத்துணர்ச்சிகாக டீ தான் விரும்பி குடிப்பார்கள் . ஆனால் ஒரு சிலர் காபி விரும்பி குடிப்பார்கள் அதன் மூலம் புத்துணர்ச்சி அடைவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி காபி குடிப்பதன் மூலம் உடலில் ஒரு புத்துணர்வு ஏற்பட்டு மூளை வேகமாக வேலை செய்வதாக சிலர் தெரிவிக்கின்றனர். நம்மில் பலர் கூட இதுபோன்று சில நேரங்களில் உணர்ந்து இருப்போம்.
தெளிவான எண்ணம் :
கடிமையான குழப்பம், தெளிவு இல்லாத மனநிலையில் இருப்பவர்களுக்கு காபி ஒரு தெளிவான மன நிலை அளிக்க கூடிய ஆற்றல் உடையது. ஒருவேளை நீங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளீர்கள் என்றால் சற்று அமர்ந்து நிதானமாக ஒரு காபி குடித்துக் கொண்டே யோசித்து பாருங்கள் நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும் என கூறுகின்றனர். அப்படிபட்ட ஒரு திறன் காபி உண்டு என பலர் கூறுகின்றனர்.
கொழுப்பை குறைக்கும்:
காபி குடிப்பதால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் குறையும் என கூறுகின்றனர். உடலில் கொழுப்புகள் சேருவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் . உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்க உடற்பயிற்சி, யோகா , சிறந்த உணவு என பல வகைகளில் நம் உடலை பாதுக்காத்து கொள்ள முடியும். ஆனால் காபி குடிப்பவர்களுக்கு உடலில் அதிக கொழுப்பு இருக்காது என கூறுகின்றனர்.
அதற்கு காரணமாக சொல்லப்படுவது காபியில் உள்ள காபின் என்ற பொருள் உடலில் கொழுப்பு அதிகம் சேர விடாமல் கொழுப்பை எரிக்க உதவுகிறது என கூறப்படுகிறது.
இதுபோல ஏராளமான நன்மைகள் காபியில் உண்டு. ஆனால் எந்த பொருளையும் அளவாக எடுத்துக் கொள்வதே உடலுக்கு நன்மை தரும் ஒன்றாகும் . பெரியோர்கள் சும்மாவா சொன்னாங்க அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று . உங்களுக்கு இதுபோன்ற பதிவுகளை காண விரும்பினால் தொடர்ந்து நம் பக்கத்தை தொடருங்கள். உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.