beauty tips in tamil: குளிர்காலத்தில் தலைமுடி பிசுபிசுப்பாக உள்ளதா…? கூந்தலை பராமரிக்கும் டிப்ஸ்…!!
1 min readbeauty tips in tamil
குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவது என்பது ஒரு கஷ்டமான வேலை. இதனால் தலைமுடி பிசுபிசுப்பாக மாறும். அப்படி குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் முடியைப் பாதுகாப்பது எப்படினு பார்ப்போம் வாங்க.
beauty tips in tamil
* உங்கள் தலைமுடியை அடிக்கடி தொடாதீர்கள். ஏனெனில் உங்கள் விரல்களிலிருந்து அழுக்கை உங்கள் உச்சந்தலைக்கு கொண்டு செல்லும்.
* உங்கள் தலைமுடியை சரியான இடைவெளியில் கழுவுங்கள். குறைவான முறை தலைமுடியை அலசுவதால் எண்ணெய்கள் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
* உங்கள் தலையணைகள் மற்றும் சீப்புகளை சுத்தமாக வைத்திருங்கள்.
* உங்கள் முடியை இறுக்கமாகக் கட்டுவதைத் தவிர்க்கவும்.
* கெமோமில் க்ளென்சரைப் பயன்படுத்துங்கள், இது உங்கள் தலைமுடியை உள்ளே இருந்து வலிமையாக்கும்.
* அதிகமான முடி பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மேலும் பல செய்திகளுக்கு கிளிக் செய்யவும்
* ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை ஜெல்லைக் கலந்து ஒரு கண்டிஷனரைத் தயாரிக்கவும். இந்தக் கலவையை கண்டிஷனராகப் பயன்படுத்துங்கள். இது கூந்தலில் இருந்து எண்ணெயைக் குறைக்க உதவும்.
* தலைமுடியை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கக்கூடிய ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பெர்ரிப் பழங்களை சாப்பிடுங்கள்.