4 நாட்கள் மூடப்படும் வங்கிகள்..! காரணம் இதுதான்..!

1 min read
bank-vidiyarseithigal.com

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில்  அறிவிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வரும் 15 மற்றும் 16ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தபட்ட நிலையில் சுமூக முடிவு எட்டபடததால் வேலைநிறுத்த முடிவை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலைநிறுத்ததில் பங்கேற்பதால் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது.

இன்று சனி மற்றும் நாளை ஞாயிற்றுகிழமை வங்கி விடுமுறை என்பதாலும் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் என்பதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் சேவை பாதிக்கபட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுசெயலாளர் கூறுகையில் 4 நாட்கள் தொடர்ச்சியாக வங்கிகள் மூடப்படுவதால் சேவைகள் பாதிக்கபடும் நிலை உள்ளது. வாடிக்கையாளர்களின் சேவைகளை தொடரும் வகையில் ஏ.டி.எம் களில் போதுமான அளவு பணம் நிரப்பி வைக்கபடும் என தெரிவித்துள்ளார்.

Spread the love
x