american president: அமெரிக்கா அதிபர் ஆன இவ்வளவு விசயங்கள் இருக்கா..! ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!

1 min read
american president-vidiyarseithigal.com

american president

அமெரிக்கா உலக நாடுகளில் முக்கிய நாடாக உள்ளது. அதிலும் அமெரிக்கா அதிபர் என்றால் தனிப்பட்ட மரியாதை உலக நாடுகள் மத்தியில் உண்டு. அப்படிபட்ட பதவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தான் தேர்தல் நடைபெற்றது.

அந்த தேர்தலில் டோனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனாலும் அவரின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத டிரம்ப்பின் ஆதரவாளர்கள் பல மோதல்களில் ஈடுபட்டனர். ஒரு வழியாக அவற்றையெல்லாம் சரி செய்து ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் பதவிக்கு வந்தால் ஒருவர் என்னென்ன அம்சங்களை பெறலாம் என்பதை பார்க்கலாம் . அமெரிக்க அதிபராக பதவி ஏற்கும் நபருக்கு ஆண்டு ஊதியமாக ரூ.2.92 கோடி வழங்கப்படும் .பயணச் செலவாக ரூ73.2 லட்சமும் , இதர செலவாக ரூ.50.5 லட்சமும் வழங்கப்படும் .

மேலும் அதிபர் தங்குமிடமாக 132 அறைகளுடன் கூடிய நட்சத்திர விடுதிகளை காட்டிலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட வெள்ளை மாளிகை வழங்கப்படும் . அதிபருக்கு பணிவிடை செய்ய 24 மணி நேரமும் 100 பணியாளர்கள் இருப்பர்.

அதிபர் பயணம் செய்ய பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட லிமோசன் கார் வழங்கப்படும் . வெளிநாட்டு பயணங்களுக்கு குட்டி நட்சத்திர விடுதி போன்ற போயிங்க் 747 -200பி விமானமும், உள்நாட்டு பயணத்திற்கு பிரத்யேக பாதுகாப்புகள் நிறைந்த விமானமும் இருக்கும் .

மேலும் செய்திகளுக்கு கிளிக் செய்யவும்

அதிபருக்கு (american president) 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு படை கொடுக்கபடும். அதிபரின் உடல்நிலையை கவனித்து கொள்ள பிரத்யேக மருத்துவ குழு மற்றும் அதிபரின் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் மரணித்தால் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும்.

பதவிக்காலம் முடிந்து அதிபர் ஒய்வுக்கு பின் ஒய்வூதியம், பணிவிடை செய்ய பணியாளர்கள், சிறப்பு பாதுகாப்பு என பல சலுகைகள் தொடரும்.

Spread the love
x