Tamil online news : இந்தியா உண்மையான நண்பனாக நடந்துக் கொள்கிறது – அமெரிக்கா பாராட்டு..!!

1 min read
coronavaccine-vidiyar

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்துகட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதுவரை இந்தியாவில் 12.7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு க்ளில்க் செய்யவும்

இந்நிலையில், மாலத்தீவு, பூட்டான், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நட்பு நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்ததன்படி அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் தடுப்பூசிகள் பல லட்சம் டோஸ்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு அமெரிக்கா தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமைச்சரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா உண்மையான நண்பனாக நடந்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
x