Aloe vera gel benefits tamil

1 min read
Aloe vera gel benefits tamil-vidiyarseithigal.com

Aloe vera gel benefits tamil

கற்றாழை பல நன்மைகள் நிறைந்த ஒன்றாக உள்ளது. இயற்கை எப்போதும் பல அதிசயங்களை கொண்டு இருக்கும். அதில் ஒன்றாக தான் கற்றாழை உள்ளது. கற்றாழையில் உள்ள எண்ணற்ற நன்மைகள் பல விதத்தில் நமக்கு பயன்படுகிறது. இதில் உள்ள மூலிகை மகத்துவத்தை அறிந்தே நம் முன்னோர்கள் இதனை பயன்படுத்தி வந்தனர்.

கற்றாழை ஜெல்:

கற்றாழையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்க பயன்படுகிறது. மேலும் அனைத்து தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் கற்றாழையை பயன்படுத்தலாம்.

பொலிவான சருமத்தை பெறவும், அடர்த்தியான கூந்தலுக்கும் கற்றாழையை உபயோகிக்கலாம். கற்றாழை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அதன் பக்கவிளைவுகள் குறித்தும் நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

கவர்ச்சியில் சூட்டைக் கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..! அப்ப இனிமே இப்படிதான் போல..!

கற்றாழை ஜெல்லில் உள்ள ஊட்டசத்துக்கள்:

கற்றாழை ஜெல்லில் வைட்டமின்கள், நொதிகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், சர்க்கரைகள், ஆந்த்ராகுவினோன்கள், கொழுப்பு அமிலங்கள், ஹார்மோன்கள், லிக்னின், சபோனின்கள் சாலிசிலிக் அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

Aloe vera gel benefits tamil-vidiyarseithigal.com

Aloe vera gel benefits tamil

இது உடலுக்கு குளிர்ச்சியான தன்மையை அளிக்கிறது. மேலும் இந்த மூலிகைகளில் லுபியோல், சாலிசிலிக் அமிலம், யூரியா நைட்ரஜன், இலவங்கப்பட்டை அமிலம், பீனால்கள் மற்றும் கந்தகம் உள்ளன. கற்றாழை ஜெல் சருமத்தில் சூரிய கதிர் வீச்சுக்கு எதிராக செயல்படுகிறது.

தீக்காய சிகிச்சை:

கற்றாழை கொண்டு தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்கலாம். எப்படி என்றால் உடலில் தீக்காயம் உள்ள இடத்தில் கற்றாழை தினமும் மூன்று வேளை தடவி வந்தால் தீக்காயத்தை குணப்படுத்த பேருதவியாக உள்ளது. அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பலன் காணலாம்.

இப்பவே இவ்வளவு கவர்ச்சியா? மௌன ராகம் சீரியல் நடிகை ஹாட் கிளிக்ஸ்.

சூரிய ஒளியில் சிகிச்சை :

சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்க கற்றாழை உதவுகிறது.

Aloe vera gel benefits tamil-vidiyarseithigal.com

Aloe vera gel benefits tamil

இதனால் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாதவர்கள் கற்றாழை ஜெல்லை எடுத்து சருமத்தில் அப்ளை செய்து உலர்ந்த பின்னர் மேக்அப் செய்து கொண்டு வெளியே செல்லவும். மேலும் சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை நீக்கவும் கற்றாழையை பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல் பயன்கள்:

கற்றாழை ஜெல்  காயங்கள், முகப்பரு, பூச்சிக்கடி, அரிக்கும் தோல் அழற்சி, ஒவ்வாமை மற்றும் தீக்காயங்கள் போன்ற தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

இது வைரஸ்களை எதிர்த்துப் போராடும் மேக்ரோபேஜ்கள் மற்றும் இரத்த வெள்ளை அணுக்களை தூண்டுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய்க்கு உதவுகிறது. மேலும் செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அவைமட்டுமின்றி இனப்பெருக்க அமைப்பு மற்றும் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

Aloe vera gel benefits tamil-vidiyarseithigal.com

Aloe vera gel benefits tamil

மலச்சிக்கல், அழற்சி குடல் நோய், டிஸ்பெசியா, வயிறு மற்றும் டூடெனனல் புண்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

சிறுநீரக கற்களை தடுக்க உதவுகிறது.பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.

முடி உதிர்வதை தடுக்கிறது, உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் மாதவிடாயை தூண்டி அண்ட விடுப்பை மேம்படுத்துகிறது.

கற்றாழை ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது மூட்டுவலி, கண் நோய்கள், கட்டிகள், மண்ணீரல் விரிவாக்கம், கல்லீரல், வாந்தி, மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, போன்றவற்றிற்கு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

Aloe vera gel benefits tamil-vidiyarseithigal.com

Aloe vera gel benefits tamil

கற்றாழை ஜெல்லை உள்ளுக்கு மற்றும் வெளிப்புறத்திலும் என இரண்டு நிலையிலும் பயன்படுத்தலாம். அதே போன்று மருந்துகடைகளில் கற்றாழை ஜெல் மாத்திரை வடிவில் கிடைக்கும் இதையும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

கற்றாழை ஜெல் செரிமான அமைப்பில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இது குடல், சிறுநீரகம், பித்தப்பை மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. கற்றாழையின் ஜெல்லில் இருந்து புளிக்க வைக்கப்பட்டு ஒயின் என்ற பானம் தயாரிக்கப்படுகிறது.

இந்த பானம் இரத்த சோகை, பெண்களின் இனப்பெருக்க பிரச்சனைகள் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்தாக பயன்படுகிறது. ஆயுர்வேதத்தில் மாதவிடாயை தூண்ட கற்றாழை சாறு பயன்படுகிறது. தீக்காயங்கள், முகப்பருக்கள், சரும பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

கற்றாழை ஜெல்லில் இருந்து மஞ்சள் திரவம் வெளியேறும் இதை வெளியேற்றிவிட்டு தான் உள்ளுக்கும் வெளிப்புறபூச்சுக்கும் பயன்படுத்த வேண்டும்.

buddha statue for home vastu: லாபிங்க் புத்தா வயிற்றில் தடவினால் பணமழையா?

கற்றாழையின் பக்க விளைவுகள் :

* கற்றாழை ஜெல் தோல் பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆரம்பத்தில் கற்றாழையை பயன்படுத்தும் சிலருக்கும் எரியும் உணர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

* உங்கள் சருமத்தில் கற்றாழை ஜெல்லை நீண்ட நேரம் வைத்திருந்தால் அது சருமத்தை வறட்சியாக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே, கற்றாழை ஜெல்லை பயன்படுத்திய சில நிமிடங்களுக்குப் பிறகு சருமத்தில் உலர விடாமல் தண்ணீரில் வாஷ் செய்து விடவும்.

Aloe vera gel benefits tamil-vidiyarseithigal.com

Aloe vera gel benefits tamil

சிலருக்கு கற்றாழை ஜெல் ஒவ்வாமை இருக்கலாம். இதனால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே, நீங்கள் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு சிறிய பகுதியில் சோதித்து எந்த ஒவ்வாமையும் ஏற்படாத பட்சத்தில் உங்கள் முகத்தில் தடவவும். எரியும் உணர்வு ஏற்பட்டால் பயன்படுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.

* இது காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கற்றாழை குறித்த அறிவியல் ஆதாரங்கள் தற்போது வரை இல்லை என்பதால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி பயன்படுத்துவது நல்லது.

Spread the love
x