affiliate marketing tips: Affiliate marketing tips in tamil..! எளிமையாக அப்ளியேட் மார்கெட்டிங்க் டிப்ஸ்..!

1 min read
affiliate marketing tips-vidiyarseithigal.com

affiliate marketing tips

அப்ளியேட் மார்கெட்டிங்க் என்றால் என்ன?

இது ஒரு வகையான டிஜிட்டல் மார்கெட்டிங்க் வகை தான் . ஒரு நிறுவனம் அவர்கள் தயாரித்த பொருட்களை விற்க டீலர்களை நாடுவார்கள் அது போல தான் இது. இங்கு சற்று மாறுபட்டு நாம் டீலராக மாறி ஆன்லைனில் அவர்களது பொருட்களை விற்று கொடுத்தால் நமக்கு 5 முதல் 10 சதவீதம் வரை கமிஷனாக கிடைக்கபெறுகிறது.

உதராணமாக ஒரு நிறுவனத்தின் பொருளை நீங்கள் விற்று கொடுத்தால் உங்களுக்கு கமிஷனாக ரூ.100 கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம் . தற்போது அதே பொருளை உங்கள் மூலம் 10 பேர் வாங்கினால் உங்களுக்கு எளிதாக ரூ.1000 வரை கமிஷன் கிடைத்துவிடும்.

நீங்கள் விற்பனை செய்யும் பொருளுக்கு ஏற்ப உங்கள் கமிஷன் தொகை மாறுப்பட்டு கொண்டே இருக்கும்.

அப்ளியேட் மார்க்கெட்டிங்கில் வெற்றி பெற சுலபமான வழிகள் (affiliate marketing tips for beginners) :

Sell knowledgeable products:

நாம் அனைவரும் ஒவ்வொரு விதமான பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருப்போம். சிலர் Gadgets மீதும், சிலர் mobiles மீதும் என பலவித பொருட்கள் மீது ஆர்வம் கொண்டவராக இருப்போம். நாம் இப்போது அப்ளியேட் மார்கெட்டிங்கில் ஈடுபடும் போது எந்த வகையான பொருள் மீது நம் அதிகபடியான தகவல் தெரிந்து வைத்துள்ளோமோ அவற்றை அப்ளியேட் மார்க்கெட்டிங்கில் விற்கலாம். அப்படி செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம்.

Own website:

அப்ளியேட் மார்க்கெட்டிங்கில் முக்கியமான பொருட்களை விற்கும் தளம் என கூறப்படும் வெப்சைட் ஆகும். இதுவும் ஒரு வகையான Product review and selling என்றே கூறலாம். நாம் ஒரு செல்போனை அப்ளியேட் மார்கெட்டிங்க் மூலம் விற்க நினைத்தோம் என்றால், முதலில் அந்த செல்போன் குறித்த முழு தகவல்களையும் நாம் எழுத வேண்டும். இறுதியாக அதனை வாங்குவதற்கான லிங்கினை நாம் அங்கு பதிவிட வேண்டும்.

Choosing affiliate websites(affiliate marketing tips):

இன்றைய நவீன உலகில் லட்சகணக்கான அப்ளியேட் மார்கெட்டிங்க் வெப்சைட்கள் உள்ளன. அவற்றில் சிறந்த வெப்சைட் எது என்று நாம் தேர்வு செய்ய வேண்டும். வெப்சைட் தேர்வு செய்யும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அதிக வருவாய் அதாவது கமிஷன் எந்த அப்ளியேட் வெப்சைட் நமக்கு வழங்குகிறது என்று கவனிக்க வேண்டும்.

பின்னர் முக்கிய குறிப்பாக கவனிக்க வேண்டியது எந்த அப்ளியேட் வெப்சைடிலும் கணக்கு துவங்க நம்மிடம் பணம் கேட்கமாட்டார்கள் அப்படி கேட்டால் அவர்கள் Scam செய்கிறார்கள் என்று அர்த்தம்.

What is mean by affiliate marketing :

Audience analysis:

உங்களுடைய வெப்சைட்டில் எந்த ஆடியன்ஸ் அதிகமாக வருகிறார்கள் என்பதை நாம் கண்டறிய வேண்டும். உதராணமாக இப்போது உங்கள் வெப்சைட்டில் அதிகமாக 18-24 வயது ஆடியன்ஸ் அதிகமாக வருகிறார்கள் என்றால், அந்த ஆடியன்ஸ் விரும்பும் பொருட்கள் குறித்து நாம் அப்ளியேட் மார்கெட்டிங்க் செய்ய வேண்டும்.

Women ஆடியன்ஸ் அதிகமாக வருகிறார்கள் என்றால் அவர்கள் வாங்கும் பொருட்கள் குறித்து அப்ளியேட் மார்கெட்டிங்க் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் செய்தால் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும்.

Promote the website :

அப்ளியேட் மார்கெட்டிங்கில் முக்கிய பங்கு வகிப்பது வெப்சைட் தான் . அப்படிபட்ட வெப்சைட்க்கு நாம் அதிகமான Viewers களை கொண்டு வர வேண்டும் . அப்போது தான் அதிகமான பொருட்களை வாங்க வைக்க முடியும் . அதற்கு நாம் செய்ய வேண்டியது வெப்சைடினை Promote செய்ய வேண்டும். அனைத்து விதமான சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக Promote செய்து அதிக views கொண்டு வரலாம்.

New websites :

வெப்சைட் தொடங்குவது நமக்கு பெரிதாக முதலீடு கிடையாது. எனவே நாம் நமது ஆடியன்ஸ் ஏற்றால் போல பல வெப்சைட்கள் தொடங்கி அதில் பல பொருட்களை நாம் விற்பனை செய்தால் அதிகமாக நாம் லாபத்தை ஈட்டலாம்.

இதுபோன்ற best affiliate marketing tips மூலம் நீங்கள் அதிக லாபம் பெறலாம். சுருக்கமாக சொன்னால் நாம் தினந்தோறும் அதிகபடியான புதுவகையான content கள் உருவாக்கி அதன் மூலம் நாம் அதிகமான கமிஷன் பெறலாம். அனைத்தும் சாதகமாக மற்றும் தெளிவாக செய்தால் அதிக லாபம் என்றே சொல்லலாம்.

Spread the love
x